கள்ளக்காதல் விவகாரம் ; வேன் ஓட்டுனர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
00:59

சென்னை : கள்ளக்காதல் விவகாரத்தில், பெண் கொல்லப்பட்ட சம்பவம், புதுவண்ணாரப் பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.



புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர், சந்திரசேகர், 40; வேன் ஓட்டுனர். இவரது மனைவி யுவராணி, 38. தம்பதிக்கு, சஞ்சய், 15, என்ற மகனும், பிரியா, 14, என்ற மகளும் உள்ளனர்.சந்திரசேகர் மனைவியை பிரிந்து, தாய் ஜெயலட்சுமி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் தனலட்சுமி, 37, என்பவருடன், சந்திரசேகருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தொடர்பு ஏற்பட்டது. இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல், சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.



மூன்று ஆண்டுகளுக்கு முன், தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, சந்திரசேகர் அவரை விட்டு பிரிந்தார். மீண்டும், கடந்தாண்டு ஜூலை முதல், சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன், மீண்டும் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.இந்நிலையில், நேற்று, தனலட்சுமி, அவரது மகள் ஷாலினி, 20, அவரது தாய் ரத்னாவதி, 58, ஆகியோர், சந்திரசேகர் வீட்டிற்கு சென்று, மீண்டும் சேர்ந்து வாழ வலியுறுத்தினர். அவர்களது பேச்சை ஏற்க மறுத்த சந்திரசேகர், தகராறில் ஈடுபட்டுள்ளார்.



இதில் ஆத்திரமடைந்த ஷாலினி, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த வேனின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தார். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், கத்தியால், ரத்னாவதியின் வயிற்றில் குத்த, ரத்த வெள்ளத்தில் சரிந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷாலினியின் அடிவயிற்றிலும், தனலட்சுமியின் கையிலும் வெட்டி, சந்திரசேகர் தப்பினார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சந்திரசேகரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X