போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
01:00

மனைவியை வெட்டியவர் சிக்கினார்பட்டினப்பாக்கம்: மந்தைவெளி, 12வது டிரஸ்ட் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன், 25; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி இந்திரா, 21. ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, இந்திராவின் கழுத்தில் வெட்டினார். இதில் காயமடைந்த இந்திரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



பட்டினப்பாக்கம் போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.மாவா விற்ற மூவர் அகப்பட்டனர்திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாட்டுமந்தை மேம்பாலம் அருகே, திருவொற்றியூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி, 26, காஞ்சனா, 50, ஆகியோர் தடை செய்யப்பட்ட மாவா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த, போலீசார், 15 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.



பெண்களிடம் மொபைல் பறிப்புபீர்க்கன்காரணை: பீர்க்கன்காரணை, தேவநேசன் நகரைச் சேர்ந்தவர், சந்தியா, 20; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தேவநேசன் நகர், ரேஷன் கடை அருகில் வந்தபோது, டூ - வீலரில் வந்த, மூன்று வாலிபர்கள், சந்தியாவின் மொபைல் போனை பறித்து தப்பினர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.l லிட்டில் மவுண்ட், எல்.டி.ஜி., சாலையை சேர்ந்தவர், சுமி மேத்யூ, 49. இவர், நேற்று முன்தினம் காலை, தன் மகளை லயோலா கல்லுாரியில் விட சென்றார். பின், கல்லுாரி அருகே நின்று, மொபைல் போனில், 'கார் புக்' செய்தபோது, டூ - வீலரில் வந்த இருவர், மொபைல் போனை பறித்து தப்பினர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.மர்மமான முறையில் எரிந்த பைக்பம்மல்: பம்மல், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி, 29; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனம், நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்து, வாகனம் முழுவதும் நாசமானது. மர்ம நபர்கள் கைவரிசையா என, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.



போதை வாலிபரை தாக்கியோர் கைதுகோயம்பேடு: நெற்குன்றம், அபிராமி நகர் பிரதான சாலையில், வாலிபர் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடப்பதாக, 14ம் தேதி இரவு, கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த பிரவீன்குமார், 21, என தெரிய வந்தது. சம்பவத்தன்று இரவு, பிரவீன் குமார், மதுபோதையில், அபிராமி நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, டூ - வீலரில் அமர்ந்துள்ளார். அவரை, 'பைக் திருடன்' என நினைத்து, நெற்குன்றத்தைச் சேர்ந்த ஜெயசீலன், 25, கார்த்திகேயன், 25 மற்றும், 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் தாக்கியது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.



இரண்டு மணி நேரத்தில் மாணவி மீட்புஆவடி: திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் முகுந்த். அவரது மகள், மத்திய அரசு நிறுவன பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், அமைந்தகரை அருகே அந்த மாணவி இருப்பதாக, ஆட்டோ ஓட்டுனர்கள் மூலம், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருமுல்லைவாயல் போலீசார், மாணவியை மீட்டனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, பஸ்சில் ஏறிய மாணவி, கூட்ட நெரிசலால், அமைந்தகரைக்கு சென்றது தெரியவந்தது. இரண்டு மணி நேரத்தில் மாணவியை மீட்ட போலீசாருக்கு, உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு, 'கம்பி!'செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஸ்டீபன், 20. நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் கத்தியை காட்டி பலரிடம் பணம் கேட்டுள்ளார். தர மறுத்த நபர்களை தாக்கி உள்ளார். விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், நேற்று, ஸ்டீபனை கைது செய்தனர்.வழக்கறிஞர் கார் மாயம்ஜாம்பஜார்: ராயப்பேட்டை, நாயர் அய்யா பிள்ளை தெருவைச் சேர்ந்தவர், நாராயணசாமி, 67; வழக்கறிஞர். நேற்று முன்தினம் மதியம், வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரது கார் மாயமானது. ஜாம்பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.பைக் திருடன் பிடிபட்டான்வடபழநி: வடபழநி பஸ் நிலையம் அருகே, வடபழநி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டூ - வீலரில் வந்த நபரை மடக்கி, விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, டூ - வீலரின் ஆவணத்தில் இருந்த நபரின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் பேசிய நபர், கடந்த வாரம் மாம்பலத்தில், தன் பைக் திருடு போனதாகவும், போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, டூ - வீலரில் வந்த நபரிடம் போலீசார் விசாரித்ததில், பிடிபட்டவர், ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கணேசன், 34, என்பதும், டூ - வீலர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.மாடு திருடியவருக்கு, 'காப்பு!'புளியந்தோப்பு: தண்டையார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர், யுவராஜ், 29. இவர், தனக்கு சொந்தமான, மூன்று எருமை மாடுகளை விற்பதற்காக, சில நாட்களுக்கு முன், புளியந்தோப்பு மாடு தொட்டிக்கு அழைத்து சென்றார். அன்று மாடுகள் விற்கவில்லை என்பதால், அங்கேயே கட்டி வைத்து, வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை சென்றபோது, மாடுகள் திருடு போயிருந்தன. புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார், 40, சிக்கினார். நேற்று காலை, அவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் ஸ்ரீதர், அனு ஆகியோரை தேடி வருகின்றனர். அவரிடம் இருந்து, ஒரு எருமை மாடு பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X