சிங்காநல்லூர் குளத்துக்கு வாராயோ 'வான்மதி!'...பழம் அளித்து வரவேற்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 பிப்
2020
01:13
பதிவு செய்த நாள்
பிப் 19,2020 01:12

கோவை:கோவை சிங்காநல்லுார் குளத்தில், பட்டாம்பூச்சிகளை வரவேற்று அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பழங்களை தட்டுகளில் வைத்து தொங்க விட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு, இங்கு சூழல் பாதுகாப்பு குறித்த வகுப்பும் நடக்கிறது.கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, சிங்காநல்லூர் குளம், பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது.


நொய்யல் ஆற்றின் நீராதாரத்தை கொண்டுள்ள இந்த குளம், 16-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால், 288 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த குளத்துக்கு, 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இளைப்பாற வருகின்றன. இதன் கரைகளில், 390 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில், 200 மேற்பட்டவை மூலிகை செடிகள் என, அறியப்பட்டுள்ளன. 72 வகை பட்டாம்பூச்சிகளும், பூச்சி இனங்களும் குளக்கரையில் வாழ்கின்றன.


இந்த குளத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், 720 வகையான பல்லுயிர்களுக்கு இக்குளம் வாழ்வாதாரமாக இருப்பதை கண்டறிந்தனர்.அதனால், சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சிங்காநல்லூர் குளத்தை பாதுகாத்து, பல்லுயிர் பெருக்கத்துக்கு உகந்த குளமாக மாற்றும் வகையில், பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய, கியூப் எனும் சூழல் அமைப்பினர், பழத்தட்டுகளை தொங்க விட்டுள்ளனர். அந்த அமைப்பின் சதீஷ் மற்றும் வின்னி ஆகியோரிடம் பேசியபோது, 'பட்டாம்பூச்சி, தும்பி, உள்ளிட்ட பல பூச்சிகள், கனிந்த பழங்கள் அல்லது அழுகிய பழங்களில் இருந்து வெளியேறும் சாற்றை, விரும்பி உறிஞ்சி குடிக்கும். சர்க்கரை தண்ணீர், உப்பு போன்ற மினரல் சத்துள்ள பொருட்களையும் வைத்து இருக்கிறோம்.


இதில் உள்ள ஊட்டச்சத்து, பூச்சிகள் பல்கி பெருக உதவும்' என்றனர். வாரத்தில் மூன்று நாட்கள், பள்ளி மாணவர்கள் இங்கு வந்து பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு சுற்றுச்சூழலியல் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விளக்கம் அளிக்கும், ஆரோக்கிய நிகழ்வும் இங்கு நடந்து வருகிறது.சிங்காநல்லுார் குளத்துக்கு, 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இளைப்பாற வருகின்றன.


குளத்தின் கரைகளில், 390 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில், 200 மேற்பட்டவை மூலிகை செடிகள் என, அறியப்பட்டுள்ளன. 72 வகை பட்டாம்பூச்சிகளும், பூச்சி இனங்களும் குளக்கரையில் வாழ்கின்றன. குளத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், 720 வகையான பல்லுயிர்களுக்கு, இக்குளம் வாழ்வாதாரமாக இருப்பதை கண்டறிந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X