'அவசரம் 108' செயலியை பயன்படுத்துங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
01:13

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், மூச்சுத் திணறல் காரணமாக, மாணவர் இறந்ததை அடுத்து, 'அவசரம் 108' என்ற மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.


சுவாச கோளாறுகாஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் கணேஷ்குமார், 21. இவருக்கு, சுவாச கோளாறு இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், 9ம் தேதி மாலை, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மைதானத்திற்கு விளையாடச் சென்றார்.அப்போது, அவருக்கு, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மைதானத்திலும் யாரும் இல்லை.இதையடுத்து அவர், '108' ஆம்புலன்ஸ் சேவை மையத்தை தொடர்பு கொண்டார். ஆம்புலன்ஸ் சேவை அலுவலரிடம் பேசும்போது, 'எனக்கு மூச்சுத் திணறலாக உள்ளது.


உடனடியாக, பச்சையப்பன் பள்ளி மைதானத்துக்கு வாங்க' என, பேசியுள்ளார். ஆனால், சேவை மைய அலுவலர், அஜாக்கிரதையாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கணேஷ்குமார் இருக்கும் இடம் தெரியாமல், ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் அலைந்ததாகவும் கூறப்படுகிறது.குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே, ஊழியர்கள், பச்சையப்பன் பள்ளி மைதானத்திற்கு சென்றனர். அங்கு, மயங்கிய நிலையில், கணேஷ்குமார் கிடந்துள்ளார்.ஆம்புலன்ஸ்இதையடுத்து, அவரை மீட்ட ஊழியர்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, கணேஷ்குமார் இறந்துவிட்டதாக, மருத்துவர் தெரிவித்துள்ளார்.


ஆம்புலன்ஸ், சரியான நேரத்திற்கு வராத காரணத்தாலேயே, தன் மகன் இறந்ததாக, அவரது பெற்றோர், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால், '108' ஆம்புலன்ஸ் சேவையை எளிதாக பெறுவதற்கு, 'அவசரம் 108' என்ற செயலி உள்ளது. அதை பயன்படுத்தி இருந்தால், சம்பவ இடத்திற்கு மிக விரைவாக சென்றிருப்போம்' என, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், 'அந்த செயலியைப் பயன்படுத்த பலரும் மெத்தனம் காட்டுகின்றனர். சிகிச்சை தேவைப்படுவோர், இருக்கும் இடத்தை கண்டறிந்து சொல்வதில் சிக்கல் ஏற்படுவதால், பிரச்னை ஏற்படுகிறது. மொபைல் செயலிலை பயன்படுத்தி, அதிலுள்ள பொத்தானை தொட்டால் போதும், உடனே சேவை கிடைக்கும்' என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.


மாணவர் இறப்புக்கு, ஆயிரம் காரணம் கூறினாலும், இச்சம்பவத்திற்க்கு பின்னராவது, 'அவசரம் 108' என்ற செயலியை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'அப்ளிகேஷன்' செயல்படுவது எப்படி'கூகுள் பிளே ஸ்டோர்' தளத்தில், 'அவசரம் 108' என்ற மொபைல் செயலியை, பதிவிறக்கம் செய்து, மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின், செயலி செயல்பட துவங்கிவிடும்.அவசரக் காலத்தில், இந்த செயலியை திறந்தவுடன் காண்பிக்கும் பொத்தானை அழுத்தியவுடன், ஆம்புலன்ஸ் சேவையின் கட்டுப்பாட்டு அறைக்கு, அழைப்பு தானாக சென்றுவிடும்.


மேலும், மொபைலில் உள்ள இருப்பிடம், கட்டுப்பாட்டு அறை மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மொபைலில் தொடர்பு ஏற்பட்டுவிடும். இதனால், நோயாளி இருக்கும் இடத்திற்கு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைவாக சென்றுவிடுவர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X