பென்ஷனர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
01:28

விக்கிரவாண்டி:மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை 9,000 ரூபாய் வழங்குவது போன்று தமிழக அரசு பென்ஷனர்களுக்கும் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி ஒன்றிய அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பின் வட்டார தலைவர் ராமலிங்கம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பென்ஷனர்களுக்கு சாதகமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்த்த நிலையில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பட்ஜெட் மக்கள் நலன்சார்ந்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக 64,208.55 கோடி ரூபாயும், ஓய்வூதியம் வழங்க 33,009.35 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும், பென்ஷனர்கள் தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.இதனால் அதிருப்தியும், ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது. பென்ஷனர்கள் கோரிக்கையான ஐ.ஏ.எஸ்., அதிகாரி சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு அறிக்கையை வெளியிட்டு பரிந்துரை செய்ய வேண்டும்.மத்திய அரசு போன்று 21 மாத நிலுவை ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு போன்ற குறைந்த பட்ச பென்ஷனாக 9,000 ரூபாய் வழங்க வேண்டும், மருத்துவ படியாக 1,000 ரூபாய் வழங்க வேண்டும். 20 ஆண்டு பணிக்கு முழு பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X