சாயும் மின்கம்பம்; சிதையும் கழிவுநீர் வாறுகால்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
05:31

ஸ்ரீவில்லிபுத்துார் : சாயும் மின்கம்பம், சிதையும் கழிவு நீர் வாறுகால், கொசுத்தொல்லை, சுகாதார கேடு என பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ., காலனி பொதுமக்கள்.இப்பகுதியில் தற்போது 100 க்கு மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில் நாளுக்குநாள்குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் பல்வேறு அடிப்படை பிரச்னைகளினால்மக்கள் அவதியுற்று வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் வாறுகால்கள் இடிந்து, சிதைந்து இருப்பதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ரோடுகள் பராமரிப்பின்றி பல ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயரத் துவங்கி விட்டன.பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் இப்பகுதி குழந்தைகள் விளையாட இடமின்றி தவிக்கின்றனர்.மின்கம்பங்கள் இருந்தும் போதிய மின் விளக்குகள் இல்லாததால் பல்வேறு குறுக்கு தெருக்களில் இருண்ட சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் திருடர்கள் நடமாட்டம் மற்றும் சமூக விரோதிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.



தற்போதுள்ள தெருக்கள், ரோடுகளின் ஜல்லிகற்கள் பெயர்ந்து வருவதால வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். தங்கள் பகுதியில் நிலவும் குறைகளை ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்கவேண்டுமென்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.மின்கம்பத்தை மாற்றுங்கஇங்குள்ள மின் கம்பம் ஒரு பக்கமாக சாய்ந்து வருகிறது. மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சிகள் உதிர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் இன்றும் சீரமைக்கவில்லை. புதிய மின்கம்ப அமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அரவிந்தராஜ், குடியிருப்பாளர், ஸ்ரீவில்லிபுத்துார்.



தேவை போலீஸ் ரோந்துகுடியிருப்புகள் அதிகரித்துவரும் இப்பகுதியில் அடிக்கடி கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இப்பகுதியில் கொள்ளை முயற்சி நடந்தது. மாலை நேரங்களில் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.இங்கு இரவில் மட்டுமின்றி பகலிலும் போலீஸ் ரோந்து அவசியமாகிறது.-முத்துவேல்நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர்.கொசுமருந்து அடியுங்ககண்மாய் பகுதியை சார்ந்து இக்குடியிருப்புகள் இருப்பதால் மாலை நேரங்களில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இரவுநேரங்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் சர்வசாதாரணமாக செல்கிறது. சுகாதாரக் கேட்டை போக்க தினமும் தூய்மைப் பணியும், கொசு மருந்து அடிப்பதும் அவசியமாகிறது.-சத்தியமூர்த்தி, குடியிருப்பாளர், ஸ்ரீவில்லிபுத்துார்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X