தவறியதால் தடுமாற்றம்! வசதிகளால் பாதிக்கிறது வங்கி,வாடிக்கையாளர் உறவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
05:33

அருப்புக்கோட்டை : அதி நவீன வசதிகள், அனைத்திலும் மெஷின்கள் பயன்பாடு என வங்கிகள் மாற்றம் கொண்டு வருவதால் வங்கி - வாடிக்கையாளர்கள் உறவு பாதிப்பு அடைவதுடன் கிராமத்தினர் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.



இன்றைய நவீன போட்டி உலகில் அனைத்திலும் எல்க்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம் மனிதனின் பாதி வேலைகளை செய்கின்றன. இவற்றில் வங்கிகளும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை கவர அதி நவீன வசதிகளை செய்து வருகின்றன. பணம் எடுக்க, பணம் போட, பாஸ்புக் பிரின்ட் செய்ய என அனைத்து வேலைகளும் மெஷின்கள் மூலம் நடக்கிறது. இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு அலைபேசி மூலம் வங்கி பரிவர்த்தனை வசதிகளையும் ஏற்படுத்தி தருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் செல்ல வேண்டிய பணிகளும் குறைகிறது.



வங்கி - வாடிக்கையாளர்கள் உறவு நிலை சிறிது சிறிதாக குறைந்து நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பும் ஏற்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் வங்கி பணியாளர்களை பார்ப்பதை விட அங்குள்ள மெஷின்களை பார்க்கும் நேரம் தான் அதிகமாக உள்ளது.வாடிக்கையாளர்களின் நலன் கருதி அவர்களுடைய நேரத்தை மிச்சப்படுத்த காத்திருக்காமல் எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் பணம் எடுக்க முடியும் என்ற நிலையை வங்கிகள் ஏற்படுத்தி உள்ளன. இருப்பினும் பராமரிப்பு பணி முறையாக இல்லாததால் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம்., மிஷின்கள் பணமின்றி காட்சி பொருளாக உள்ளன.



பாஸ்புக் பிரின்ட் செய்யும் இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. பணத்தை வங்கியில் செலுத்த சென்றால் மெஷின்களில் போடுங்கள் என்று வங்கியில் தவிர்த்து விடுகின்றனர். கிராமப்புறத்தை சேர்ந்த மக்கள்நவீன வசதிகளை பார்த்து வங்கிக்குள் செல்லவே பயப்படும் சூழ்நிலையை வங்கிகள் ஏற்படுத்தி உள்ளன. ஏதாவது தகவல்களை பெற சென்றால் சரியான பதில்களை அவர்களால் பெற முடியவில்லை. நவீன வசதிகள் தேவை தான். அதற்கான இடம், சூழ்நிலைகளை பொறுத்து செய்ய வேண்டும்.



அருப்புக்கோட்டையில் பெரும்பாலான வங்கிகளின் ஏ.டி.எம்.கள், பணம் போடும் மெஷின்கள், பாஸ்புக் பிரின்ட் செய்யும் மெஷின்காட்சி பொருளாக தான் உள்ளன. வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் 'கியூ' வில் நிற்க வேண்டியுள்ளது. ஏ.டி.எம்., மையங்களும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி உடனுக்குடன் மெஷின்கள் பழுதை நீக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்த வேண்டும்.



அடிக்கடி பழுதாகும் மெஷின்கள்



வங்கிகளில் பணம் எடுக்க, பணம் போட வைக்கப்பட்டுள்ள மெஷின்கள் அடிக்கடி பழுதாகின்றன. பல நாட்கள் ஆனாலும் சரி செய்வதில்லை. ஏ.டி.எம்., மையங்களிலும் பணத்தை நிரப்புவதில்லை. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்., மையத்தை தேடி ஓட வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்கள் உடனுக்குடன் பணம் எடுக்க, நேரத்தை மிச்சப்படுத்த இதுபோன்ற வசதிகள் தேவை தான் என்றாலும் இதன் மீதான பராமரிப்பு பணிகள் இல்லாததால் இதுவே தொல்லையாகி விடுகிறது. வசதிகள் ஏற்படுத்துவதில் காட்டும் அக்கறையை பழுதடைந்த மெஷின்களை சரி செய்வதிலும் வங்கிகள் காட்ட வேண்டும்.- ராஜசேகர், தனியார் நிறுவன ஊழியர்,அருப்புக்கோட்டை.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X