முஸ்லிம்கள் அமைப்பு பேரணி; கடலூரில் 2,500 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
23:22

கடலுார் : குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடலுாரில் அனுமதியின்றி இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்ற 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.



குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அதற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி, கடலுாரில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடந்தது.பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் நேற்று காலை கடலுாரில் குவிந்தனர்.



கூட்டமைப்பு ஷலியுல்லாஹ் ஹஜ்ரத் தலைமையில் பேரணி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டது. போலீசார் தடுத்து நிறுத்தி, பேரணியில் பங்கேற்ற 2,500 பேரை கைது செய்து, சுப்புராயலு திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



பேரணியில் கலந்துகொண்ட ஒரு பிரிவினர் சாலையில் அமர்ந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். உடன் முஸ்லிம் தலைவர்கள், பேரணி கூட்டமைப்பு சார்பில் நடப்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கைதாகுமாறு வலியுறுத்தினர். பின்னர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X