மன நிம்மதிக்காக கையேந்தும் சுவீடன் பணக்காரர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
12:03




கோவை : ஐரோப்பிய நாடான சுவீடனைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர், மன நிம்மதிக்காக, கோவை வீதியில் பிச்சை எடுத்து வருவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, நாளை நடைபெறுகிறது.இவ்விழாவுக்காக, பல நாடுகளை சேர்ந்தவர்கள், ஈஷாவுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் பலர், 'சிவாங்கா சாதனா' விரதம் மேற்கொண்டு, வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம்.அந்த விரதம், 42 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, நாள்தோறும், 21 முறை, சிவ நமஸ்கார பயிற்சியும்; 21 நபர்களிடம் யாசகமும் பெற வேண்டும்.அதன் படி, ஈஷாவுக்கு, தன் குடும்பத்துடன் வருகை தந்துள்ள, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிம், 32, கோவையில் பிச்சை எடுத்து வருகிறார்.கோவில், ரயில் நிலையம், பஸ் நிலையம் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து, பிச்சை எடுக்கிறார். பொதுமக்கள் தரும், 5, 10 ரூபாய்களை பெற்று, புன்னகையுடன் வலம் வருகிறார்.



அவரிடம் விசாரித்ததில், ''என்னிடம், பணம் இருக்கிறது. தோட்டக்கலை சார்ந்த தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறேன். ஆனால், மன நிம்மதி இல்லை. விரதத்தின் படி, பிச்சை எடுப்பதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது,'' என்றார்.மேல் சட்டையின்றி, நீண்ட முடியுடன், நெற்றியில் திருநீறு, குங்குமத்துடன் வலம் வந்து, பிச்சை எடுக்கும் கிம், கோவை மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X