கழிப்பறை இருக்கு, சமுதாய கூடம் இருக்கு செயல்பாட்டுக்கு வராது வீணாகும் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
04:50

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தில் கழிப்பறை சேதமடைந்தும், சமுதாய கூடம் காட்சி பொருளாகவும் உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இப்பகுதியில் ரூ. பல லட்சம் செலவில் நகராட்சி சமுதாய கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.


நவீன கழிப்பறையும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் பயன்பாடின்றி முட்புதர்கள் வளர்ந்து கட்டடமும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளன. காலனி பகுதி மெயின் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும் தார் ரோடு போட்டுள்ளனர்.



மற்ற பகுதி குண்டும், குழியுமாக உள்ளன. நகராட்சி குடிநீர் வாரம் ஒருமுறை வருவதால் குடிநீர் வரும் நேரத்தில் குடிநீரை பிடித்து 'டிரம்' களில் சேமித்து வைக்கின்றனர். நகராட்சி சுகாதார பிரிவு கொசு ஒழிப்பு பிரிவினர் வந்து ஆய்வு செய்து குடிநீரில் மருந்தை கலந்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் குடிநீரை குடிக்க முடியாத அளவிற்கு மருந்து வாசனை உள்ளதாக பெண்கள் புகார் கூறுகின்றனர்.



இதேபோன்று நகராட்சி பள்ளி அருகே அங்கன்வாடி மையம் கட்டடமும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் குழந்தைகளை நகராட்சி பள்ளியில் தங்க வைத்துள்ளனர். கட்டடம் புதுப்பிக்கப்படும் என நகராட்சியினர் உறுதி அளித்து 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் எந்த பணியும் நடக்கவில்லை. இரவு நேரங்களில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி வளாகம் குடிமகன்களின் பாராக செயல்படுகிறது. மாலை 6 :00மணிக்கு மேல் திறந்தவெளி பாராக உள்ளது. குடிமகன்கள் குடித்து விட்டு கும்மாளமிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.


சேதமடைந்த சுகாதார வளாகம்

நகராட்சி மூலம் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆண்டுகள் கடந்து விட்டன. சுகாதார வளாகம் சேதமடைந்து முட்புதர்கள் வளர்ந்துள்ளது. தற்போது கட்டடம் இடியும் தருவாயில் உள்ளது. மக்கள் கழிப்பறையின்றி சிரமப்படுகின்றனர்.

-- வேலுச்சாமி, தனியார் ஊழியர்.


கொசு பணியாளர்களால் தொல்லை

நகராட்சி மூலம் வாரம் ஒரு முறை குடிநீர் வருகிறது. அதை நாங்களதான் சேமித்து வைத்து பயன்படுத்துகிறோம். நகராட்சியின் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு என்ற பெயரில் குடிநீர் மருந்தை தெளித்து விட்டு செல்கின்றனர். இதனால் பிடித்து வைத்த குடிநீரை குடிக்க முடியாத அளவிற்கு மருந்து நாற்றம் வீசுகிறது.

- - சக்திவேல், கட்டட தொழிலாளி.


இடியும் நிலையில் அங்கன்வாடி

ராமசாமிபுரத்தில் உள்ள நகராட்சி அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்துள்ளது. நிரந்தர கட்டடம் இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், தனியார் ஊழியர் .


இருக்கு ஆனா இல்லை

நகராட்சி மூலம் கட்டப்பட்ட சமுதாய கூடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வரவில்லை. பொது நிகழ்ச்சிகள், விசேஷங்களுக்கு நகரை தேடி செல்ல வேண்டியுள்ளது.கட்டடம் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் சிறிது சிறிதாக சேதமடைந்து வருகிறது. பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--கண்ணன், தனியார் ஊழியர் .

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X