செயல்படாத சிக்னல்கள் ஏராளம்: விபத்து பீதியில் வாகன ஓட்டிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
04:53

சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் நகர் புறங்களில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாமல் போக்குவரத்திற்கு சிரமமாக உள்ளது. இதன் மூலம் விபத்து ஏற்படவும் வழி ஏற்படுகிறது.



மாவட்டத்தில் கிராம பகுதிகளை விட நகரங்களில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பெரிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் வந்து செல்லும். பல்வேறு பணி நிமித்தமாக மக்கள் டூ வீலரில் வந்து செல்வர்.



இது தவிர சரக்கு வாகனங்களும் அதிகளவில் போக்குவரத்தில் இருக்கும். இதை கருதி நகரங்களில் 3 ,4 ரோடு சந்திக்கும் இடங்களில் டிராபிக் சிக்னல் அமைத்துள்ள னர்.

சிக்னல் அமைக்கப்படுவதால் வாகனங்கள் காத்திருந்து முறையாக தங்களது பயணத்தை தொடரும். ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் செல்ல முடியும். இதனால் சரியான நேரத்தில் ரோட்டினை கடக்க முடியும். விபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்காது.



ஆனால் தற்போது நகரங்களில் அமைக்கப்பட்டஇச்சிக்னல்கள் பெரும்பாலானவை செயல்படவில்லை. நான்கு ரோடு சந்திக்கும் இடங்களில் வாகனங்கள் முறையாக செல்ல முடியவில்லை.


வாகனங்கள் ஒன்றையொன்று முந்தியும் , குறுக்காவும் செல்கின்றன.

டூ வீலரில் செல்பவர்கள் பெரிய வாகனங்களுக்கு இடையே விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்கின்றனர். இவர்களை போல் ஆட்டோவும் வாகனங்களுக்கு இடையே புகுந்து சென்று விபத்தில் சிக்குகிறது.



சிக்னல் செயல்படாமல் டிராபிக் போலீசாரும் போக்குவரத்தை கன்ட்ரோல் செய்ய சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு டிராபிக் சிக்னல்கள் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.



விதிகளை மீறுவதால் விபத்து



நகரங்களில் பெரும்பாலான சிக்னல்கள் செயல்படுவதில்லை. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. ஒன்றையொன்று முந்தி செல்ல முயன்ற விபத்தில் சிக்குகின்றன. டூ வீலரில் செல்பவர்கள் கொஞ்ச நேரம் காத்திருந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதில்லை. விதிமுறைகளை மீறி சென்று விபத்தில் சிக்குகின்றனர். டிராபிக் சிக்னல்கள் செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்தீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் ,

விளாம்பட்டி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X