வேளாண் மண்டலம் குறித்து தெளிவான விளக்கம்... தேவை! விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
23:15

கடலுார் : பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு குறித்து தெளிவான விளக்கம் தேவை என, விவசாயிகள் கூறினர்.



கடலுாரில் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், நபார்டு வங்கி பொது மேலாளர் ஹரிகரன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் இளஞ்செல்வி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:



வேங்கடபதி (விவசாயி): நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி,, சர்க்கரை ஆலை கழிவுநீர், திருக்கண்டேஸ்வரம் விவசாய நிலங்களில் திறந்து விடப்பட்டது. இதனால், விவசாயி ஒருவரின் நிலத்தில் பாமாயில் மகசூல் பாதிக்கப்பட்டு, 3 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீரை விவசாய நிலங்களில் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கலெக்டர்: விவசாய நிலங்களில் கழிவுநீரை திறந்து விட ஆலை நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது. இதற்கு, ஆலை நிர்வாகமே பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மண்ணின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஆலை நிர்வாகம் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம்.



மாதவன் (விவசாயி): காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்து சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய அரசு ஏற்க வேண்டும். ைஹட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்.



கடலுார் மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம், குமராட்சியில் கலப்பு விதையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, நிவாரணம் வழங்க வேண்டும். நவம்பரில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா, வாழைக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.



ரவீந்திரன் (விவசாயி): பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பில், விதைப்பு முதல் விற்பனை வரை, அனைத்து வகை உதவிகளுக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து துணை நிற்க வேண்டும். இதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா அல்லது விளை நிலங்கள் மாற்றுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என, தடை ஏற்படுத்துவதற்கு மட்டுமா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.



இதற்கு காரணம் ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்காக 768 கிணறுகள் தோண்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதில், 4 கிணறுகள் கடலுார் மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ளது. ைஹட்ரோ கார்பன் திட்டத்திற்கான கிணறுகளையும் தடை செய்தால் மட்டுமே, வேளாண் மண்டலம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.



இதுகுறித்து தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் வெளிப்படை தன்மை தேவை.



வேல்முருகன் (விவசாயி): சேத்தியாத்தோப்பு-கம்மாபுரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். அரசு கால்நடை மருத்துவமனையில் புல் வெட்டும் இயந்திரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.



முருகானந்தம் (விவசாயி): ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், 400 ஏக்கருக்கு நெல் விதை வழங்கப்பட்டது. ஆனால் விதைகள் தரமில்லாததால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விநியோகம் செய்யும் விதையே தரமில்லாமல் இருந்தால் அரசின் நிர்வாகம் மீது எப்படி நம்பகத்தன்மை ஏற்படும். மகசூல் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-பிப்-202016:05:19 IST Report Abuse
kulandhai kulandhai இந்த சிறப்பு மண்டல திட்டத்தில் அவ்வப்போது விவசாயக் கடன் தள்ளுபடி வசதி உண்டா??
Rate this:
Share this comment
Cancel
22-பிப்-202010:44:51 IST Report Abuse
ஆப்பு விளக்கமெல்லாம் எப்பப்போ தேவையோ அப்பப்போ அளிக்கப்படும். இப்போதைக்கு இதுதான் விளக்கம். ஆனா, மக்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல், கேஸ் எல்லாம் தேவையான அளவு வழங்கப் படணும் சொல்லிப்புட்டேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X