கால்நடைகள் உயிரிழப்பை தடுக்கும் முகாம்களை மறந்துட்டாங்க! சமரசம் பேசி நிலையை சமாளிக்கும் கால்நடைத்துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
23:26

உடுமலை: உடுமலை பகுதியில், பல்வேறு காரணங்களால், கால்நடைகள் உயிரிழப்பு தொடர்ந்தாலும், நோய்த்தடுப்பு புலனாய்வுக்குழு ஆய்வு மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தாமல், கால்நடைத்துறையினர் 'சமாளித்து' வருவதால், பயனாளிகள் வேதனையில் உள்ளனர்.



உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காகவும், இதர தேவைகளுக்காகவும், அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. பருவ நிலை மாற்றம் உட்பட காரணங்களால், கால்நடைகளுக்கு பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, உயிரிழக்கின்றன.இதனால், கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு, விலையில்லா ஆடு, மாடு மற்றும் கோழி வினியோக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற பெண்கள் வாழ்வாதார திட்டத்துக்கு, செயல்படுத்தப்படும்,



இத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரிடமும், வரவேற்பு உள்ளது. ஆனால், திட்டத்தை செயல்படுத்தும், கால்நடைத்துறையினர், பராமரிப்பிலும், நோய்த்தடுப்பு நடவடிக்கையிலும், போதிய அக்கறை காட்டுவதில்லை.தொடர் உயிரிழப்புவிலையில்லா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட, ஆடு, கோழிகள், பல கிராமங்களில் உயிரிழந்துள்ளது.



ஜிலோபநாயக்கன்பாளையம் கிராமத்தில் விலையில்லா ஆடுகளும், ஜல்லிபட்டி ஊராட்சியில், கோழிகளும், உயிரிழந்துள்ளன.முன்பு, கால்நடைகள் உயிரிழந்தால், கால்நடைத்துறையின், நோய்த்தடுப்பு புலனாய்வுக்குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, நோய்த்தடுப்பு பணிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்குவார்கள்.தற்போது, இந்நடைமுறை எதுவும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக, அங்குள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளிடம், சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை டாக்டர்கள், 'சமரசம்' பேசி, பிரச்னை வெளியில் வராமல் இருப்பதில் மட்டும் அக்கறை காட்டுகின்றனர். பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை பெற்றுத்தருவதாக சமாளிக்கின்றனர்.



இதனால், பிற கால்நடைகளுக்கும் நோய்த்தாக்குதல் பரவும் அபாயம் உள்ளது. தற்போது உடுமலை பகுதியில், கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்தி வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக, இந்த சீசனில், பால் உற்பத்திக்கான மாடுகளுக்கும், இதர கால்நடைகளுக்கும், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை கால்நடைத்துறையால், மேற்கொள்ளப்படவில்லை.மறந்து போன முகாம்கால்நடைத்துறை சார்பில், ஊராட்சிகளில், மாதம்தோறும், சிறப்பு பராமரிப்பு முகாம் நடத்தப்படும். முகாமில், அப்பகுதியிலுள்ள கால்நடைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, தடுப்பூசிகளும் போடப்படும். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளும் அளிக்கப்படும்.இந்த முகாம்கள், ஓராண்டுக்கும் மேலாக உடுமலை பகுதியில் நடத்தப்படவில்லை. நோய்த்தாக்குதலின் போது, தனியார் டாக்டர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை கால்நடை வளர்ப்போருக்கு தொடர்கிறது.



தமிழக அரசு, கால்நடைத்துறை அமைச்சர் மூலம், உடுமலை பகுதிக்கு, ஆம்புலன்ஸ் வசதி உட்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினாலும், கால்நடைத்துறையினரின் அலட்சியத்தால், அவை, கால்நடை வளர்ப்போருக்கு பயனுள்ளதாக மாறவில்லை. இக்கோடை காலத்தில், உடுமலை பகுதியில், கால்நடைகள் உயிரிழப்பை தடுக்க, சிறப்பு முகாம்கள் நடத்துவது உட்பட கால்நடைத்துறை 'மறந்த' திட்டங்களை அமைச்சர் நினைவூட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கால்நடை வளர்ப்போர் எதிர்பார்த்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X