கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் 'போக்சோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
23:50

மரக்காணம் : கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் போக்சோ வழக்கு போடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.



கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் மரக்காணம், கிளியனுார், ஆரோவில், வானுார், கோட்டக்குப்பம் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். புகார்கள் குறித்து மகளிர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்.கடந்த ஒரு ஆண்டாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் எஸ்.பி., அலுவலகத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த இன்ஸ்பெக்டர் ராதிகாவை மகளிர் காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றி டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.



ஆனால் இது நாள் வரை மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் ராதிகா பொறுப்பேற்கவில்லை. 'போக்சோ' சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றால் மகளிர் இன்ஸ்பெக்டரின் அனுமதி வேண்டும்.கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் மற்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் உதவியை நாடி பெண் போலீசார் செல்கின்றனர். அப்போது அவர்கள் என்னுடைய காவல் நிலையம் இல்லையென மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால் 'போக்சோ' வழக்கு போடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.



தற்போது கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர் மற்றும் 9 பெண் போலீசார், பிற காவல் நிலையத்தில் இருந்து தற்காலிக பணிக்காக 4 பேர் உட்பட 15 பெண் போலீசார் பணியில் உள்ளனர். போதிய காவலர்கள் இருந்தும் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பெண் போலீசாருக்கு பணிகளை பகிர்ந்து கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X