2025ல் கைகூடும், லட்சம் கோடி வர்த்தகம்: 'விஷன் இந்தியா' விழாவில் 'நிட்மா' தலைவர் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:12

திருப்பூர்: 'வரும் 2025ம் ஆண்டில், திருப்பூர் பின்னலாடை துறையினரின், லட்சம் கோடி வர்த்தகம் என்கிற லட்சிய கனவு நிச்சயம் நனவாகும்' என, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி பேசினார்.



திருப்பூர் பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) பொன் விழா மற்றும் விஷன் இந்தியா 2020- 2025 பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம், அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று நடந்தது. கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமைவகித்தார். ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் முன்னிலைவகித்தார். 'நிட்மா' செயலாளர் ராஜாமணி வரவேற்றார். நொய்யல் வாழ்த்து பாடலுக்கு, விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவியர் பரதநாட்டியம் ஆடினர்.தமிழக அறிவியல் தொழில்நுட்ப கழக துணை தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, நிட்மா பொன் விழா மலர் வெளியிட்டார்; சங்கத்தின் நிறுவன தலைவர் நடராஜன் பெற்றுக்கொண்டார்.'நிட்மா' தலைவர் ரத்தினசாமி பேசியதாவது:கடந்த 2003 ல் நடந்த நிட்மா சங்க வெள்ளி விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம், திருப்பூரின் ஆடை வர்த்தகம் 2020ம் ஆண்டில், ஒரு லட்சம் கோடியை எட்டவேண்டும் என்கிற லட்சிய கனவை விதைத்தார்.2005ல், உலக மயமாக்கல் வரும்; கோட்டா முறை நீக்கப்படும். இதன்மூலம், வர்த்தகம் பெருகும்; எளிதாக லட்சியத்தை எட்டமுடியும் என கணித்தோாம்; மத்திய அரசு அதிகாரிகளும், கோட்டா முறை நீங்கினால், ஆடை தயாரிப்புக்கு அதிகளவு ஆர்டர்கள் கிடைகுக்கும்; அதற்கு தயாராகுங்கள் என்றனர்.இதை நம்பி, 2005 ல், திருப்பூர் தொழில் துறையினர், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான நிட்டிங் மெஷின்களை இறக்குமதி செய்தனர். ஆனால், உலகமயமாக்கலுக்குப்பின் எதிர்பார்த்த அளவிலான, ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கவில்லை.மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, சாய ஆலை மூடல் என அடுத்தடுத்து தொடர்ந்த பிரச்னைகளெல்லாம், லட்சம் கோடி என்கிற லட்சிய கனவை அடையவிடாமல் தடுத்துவிட்டன; தற்போது, உள்நாட்டு, ஏற்றுமதியை சேர்த்து, திருப்பூரின் மொத்த ஆடை வர்த்தக மதிப்பு, 56 ஆயிரம் கோடியையே எட்டியுள்ளது.லட்சம் கோடி என்கிற லட்சியத்தை அடைவதற்கான முயற்சியை தொழில் துறையினராகிய நாங்கள் தொடர்வோம்; வரும் 2025 ல், நிச்சயம், திருப்பூரின் ஆடை வர்த்தக மதிப்பு, ஒரு லட்சம் கோடியை எட்டிப்பிடித்துவிடும்.மத்திய அரசு, ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக முழு முயற்சி மேற்கொள்ளவேண்டும். வங்கதேசம், வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளெல்லாம், சலுகைகளை பயன்படுத்தி, ஆடை ஏற்றுமதியில் நமது நாட்டை முந்திச்செல்கின்றன.வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி, சீன ஆடைகள், வங்கதேசம் மூலம், இந்திய சந்தைக்குள் வருகின்றன. அதனால், உள்நாட்டு ஆடை உற்பத்தி துறையும் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு, போட்டி நாடுகளின் தன்மைகளை புரிந்துகொண்டு, மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யவேண்டும். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆக்கப்பூர்வ திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அரசின் உதவி கிடைத்தால், வர்த்தகத்தில் பிற நாடுகளை எளிதாக முந்திச்செல்லமுடியும்.இவ்வாறு அவர் பேசினார்.சைமா சங்க தலைவர் ஈஸ்வரன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், டாஸ்மா தலைவர் அப்புக்குட்டி, ஈஸ்ட்மேன் எக்ஸ்போட்ஸ் நிர்வாக இயக்குனர் சந்திரன் வாழ்த்தி பேசினர். நிட்மா உட்பட பின்னலாடை துறை சார்ந்த அனைத்து தொழில் அமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.மெட்ரோ ரயில் அவசியம் நிட்மா தலைவர் ரத்தினசாமி மேலும் பேசியதாவது:நீரின்றி அமையாது உலகு. எனவேதான், கோவை சிறு துளி அமைப்பு, நிட்மா சங்கம், ஒளிரும் ஈரோடு, கரூரில் உள்ள நொய்யலை காப்போம் அமைப்பு இணைந்து, நொய்யலாற்றை துார்வாரும் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். ஸ்மார்ட் சிட்டியில் ஒதுக்கப்பட்டுள்ள, ரூ. 306 கோடியில், நொய்யலாறு நிச்சயம் சீர்பெறும்.கோவையிலிருந்து திருப்பூருக்கும்; திருப்பூரிலிருந்து கோவைக்கு தினம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோவை முதல் கணியூர் வரை மெட்ரோ ரயில் இயக்கும் திட்டம் உள்ளது; அங்கிருந்து 25 கிலோமீட்டர் கொண்டுசென்றால், கோவை - திருப்பூர் ஆகிய இரண்டு மெட்ரோ நகரங்களும் இணைந்துவிடும்.இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் குறையும், மருத்துவம், கல்வி, தொழில் நிமித்தம் வந்து செல்வோர், வெளிநாட்டு வர்த்தகர்கள் எளிதாக வந்து செல்லமுடியும். எனவே, அனைவரும் ஒருங்கிணைந்து, திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X