| 21ம் நுாற்றாண்டில் உலகை ஆள்வோம் Dinamalar
21ம் நுாற்றாண்டில் உலகை ஆள்வோம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:12

நிட்மா சங்கம் சார்பில், விஷன் இந்தியா '2020-- - 2025' சிறப்பு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 2020ல், பொருளாதாரத்தில், உலக நாடுகளில் முதல் ஐந்து வரிசையில் இந்தியா இடம்பெறும் என கூறியிருந்தார்.அதன்படி இந்தியா தற்போது பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், அவரது கனவு எட்டப்பட்டுள்ளது. இதை நாம், கொண்டாட வேண்டும். 21ம் நுாற்றாண்டில் உலகை ஆளப்போகும் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.2020ல், திருப்பூர் தொழில் துறை, லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் எட்டி இருக்க வேண்டும் என, கலாம் கூறியிருந்தார். ஆனால், தற்போது, 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்வதாக திருப்பூர் தொழில் துறையினர் கூறுகின்றனர். இந்த ஆண்டு முடிய இன்னும்,11 மாதம் உள்ளது. அதற்குள், லட்சம் கோடி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.திருப்பூரில் கழிவு மேலாண்மையை மேம்படுத்த மூன்று மாதத்தில் அறிவியல் பூர்வமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். தொழில் துறையை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அணியும் உடையை தயாரிக்க கூடிய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்ல உறவை, ஊடகங்கள் பெரிதுபடுத்தி காண்பிக்க வேண்டும். இது தொழில்துறையில், ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X