| பீனிக்ஸ் பறவை போன்றது திருப்பூர்: சக்திவேல் Dinamalar
பீனிக்ஸ் பறவை போன்றது திருப்பூர்: சக்திவேல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:12

நிட்மா சங்க பொன் விழாவில், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் பேசியதாவது:எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து, பீனிக்ஸ் பறவை போல, திருப்பூர் தொழில் துறை சிறப்பான வளர்ச்சி பெறும்; யாராலும் இந்த துறையை அசைக்க முடியாது.தொழில் துறையினர் நம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். பருத்தி ஆடை உற்பத்தியைவிட, செயற்கை நுாலிழை ஆடை தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்; வர்த்தகத்தை பெருக்குவதற்கு, புதுமையான ஆடை தயாரிப்பில் ஈடுபடுவது அவசியமாகிறது.அறிவிக்கப்பட்டு ஓராண்டாகியும் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகை, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்காத நிலை தொடர்ந்தது. ஏ.இ.பி.சி., தலைவராக பொறுப்பேற்ற உடன், மத்திய அமைச்சர்களை சந்தித்து, சலுகையை உடனே வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பயனாக, நேற்றுமுன்தினம், ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., சலுகைக்கு விண்ணப்பிப்பதற்கான தளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இதன்மூலம், நீண்ட நாள் இழுபறி நிலை முடிவுக்குவந்துள்ளது. ஏற்றுமதியாளர்களின் ஆடை தயாரிப்புக்கான நிதி தேவைகளுக்கு, இச்சலுகை கைகொடுக்கும். நிறுத்தப்பட்டுள்ள எம்.இ.ஐ.எஸ்., (மெர்ச்சன்டைஸ் எக்ஸ்போர்ட் இந்தியா) திட்ட சலுகையையும் வழங்கவேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நீண்ட நாள் கோரிக்கையான, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அரசு முயற்சிக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X