காட்டுத்தீ! புலிகள் காப்பகத்தில் தடுப்பு நடவடிக்கை வனத்துறையில் சிறப்பு முகக்கவச பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:18

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், காட்டுத்தீ பரவாமல் தடுக்க, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி கோட்டத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் ஆகிய, நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, புலி, சிறுத்தை, வரையாடு உள்பட பலவகை வனவிலங்குகள் உள்ளன.பிப்., முதல் மே இறுதி வரையிலான கோடை காலத்தில், மரங்கள், புற்கள் காய்ந்து, புலிகள் காப்பகம் முழுவதும் பசுமை இழந்து காணப்படும். அப்போது, இயற்கை, செயற்கை காரணங்களால், காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்.ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ ஏற்படும் போது, வனத்தினுள் மரங்கள், தாவரங்கள் தீயில் எரிந்து அழிவதுடன், வனவிலங்குகளும், பறவைகளும் பரிதாபமாக மரணிக்கிறது.ஒரு முறை காட்டுத்தீ ஏற்பட்டால், பல மாதங்களுக்கு தீ எரிந்த பகுதியில் மரங்கள், தாவரங்கள் வளராது. அப்பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டமும் வெகுவாக குறையும். காட்டுத்தீயால் வனமும், வனவிலங்குகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது



.மூங்கில் உள்ளிட்ட மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது, இயற்கையாக காட்டுத்தீ ஏற்படும். அதேபோல், சுற்றுலா பயணிகள் புகைத்து விட்டு வீசும் சிகரெட், பீடி, தீக்குச்சி போன்றவற்றாலும், காட்டுத்தீ ஏற்படுகிறது.தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம், கோவை சாடிவயல் அருகே தீ விபத்து ஏற்பட்டது.ஐந்து நாட்களுக்கு முன், டாப்சிலிப்பில் கோழிகமுத்தி செல்லும் பகுதியில், சிறிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர், 20 நிமிடம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர்.தற்போது, புலிகள் காப்பகம் முழுவதிலும், காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.வனத்துறையினர் கூறியதாவது: ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும், அதிக அளவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதி, காட்டுத்தீ பரவும் என எதிர்பார்க்கப்படும் பகுதி, சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்கிறோம்.



பொள்ளாச்சி கோட்டத்தில், நான்கு வனச்சரகங்களில், 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில், வேட்டைத்தடுப்பு காவலர்களை பயன்படுத்தி, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.மேலும், புகையிருந்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படாத வகையிலும், தீயினால் பாதிக்காத வகையிலும், தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும், முகக்கவசம் பணியாளர்களுக்கு நடப்பாண்டு முதல் வழங்கப்படுகிறது.



பணியாளர்களுக்கும், பழங்குடியினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தீயை கட்டுப்படுத்த பொள்ளாச்சி கோட்டத்தில், 225 கி.மீ., தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளால் தீ பரவுவதை தவிர்க்க, டாப்சிலிப், வால்பாறை செல்லும் வழியில் ரோட்டோரத்தில் இருபுறமும் புதர்கள் அகற்றப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X