| ரோட்டோரத்தில் 'பார்க்கிங்' பொறுப்பில்லாததால் இம்சை Dinamalar
ரோட்டோரத்தில் 'பார்க்கிங்' பொறுப்பில்லாததால் இம்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:24

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ரோடு விரிவுபடுத்தப்படும் பகுதியை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.பொள்ளாச்சியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இதற்காக, உடுமலை ரோடு, தாலுகா அலுவலக ரோடு என பல பகுதிகளில் நிலம் எடுக்கப்பட்டு, கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.ஆனால், அப்பகுதிகளை, பொதுமக்கள் கார்களை நிறுத்தும் இடமாக மாற்றிக் கொண்டனர். குறிப்பாக, உடுமலை ரோட்டில், சத்திரம் வீதி சந்திப்பில் இருந்து, சப் - கோர்ட் வரை இந்நிலை நீடிக்கிறது. இதனால், கடும் நெரிசல் நிலவுகிறது.இப்படி வாகனம் நிறுத்தி பழகியவர்கள், ரோடு அமைக்கப்பட்ட பிறகும் இதையே தொடர்வர். அகலப்படுத்தப்பட்ட ரோடு ஆக்கிரமிப்பில் சிக்கினால், திட்டப்பணியின் நோக்கமே அர்த்தமிழக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.எனவே, ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X