| பன்றியை கொன்ற சிறுத்தை! பள்ளியில் மாணவர்கள் பீதி Dinamalar
பன்றியை கொன்ற சிறுத்தை! பள்ளியில் மாணவர்கள் பீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:25

வால்பாறை: வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்து, காட்டுப்பன்றியை சிறுத்தை கொன்று சாப்பிட்டதால், மாணவர்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் பின்பக்கம் பல ஆண்டுகளாக சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. இதனால், காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் பள்ளி வளாகத்தினுள் படையெடுத்து வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தினுள் வந்த காட்டுப்பன்றியை, சிறுத்தை கடித்து கொன்று சாப்பிட்டது. அங்கிருந்தவர்கள் சப்தம் எழுப்பியதால் காட்டுப்பன்றி உடலை விட்டு சிறுத்தை வனத்தினுள் சென்றது.இதையடுத்து, நேற்று காலை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.பள்ளி வளாகத்தில் சிறுத்தை வந்து சென்றதால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சம்பவத்தால், மாணவர்கள், பெற்றோர் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X