| திரவுபதியம்மன் திருவிழா இன்று கொடியேற்றம் Dinamalar
திரவுபதியம்மன் திருவிழா இன்று கொடியேற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:26

ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் பூமிதி விழாவுக்கு, கோவிலில் இன்று கொடியேற்றம் நடக்கிறது.



ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், பூமிதி குண்டம் திருவிழா இன்று துவங்குகிறது.கொடியேற்றத்துக்காக, சர்க்கார்பதி வனத்தில் இருந்து மூங்கில் மரம் கொண்டுவரப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், முறைதாரர்கள், பக்தர்கள், சர்க்கார்பதி வனப்பகுதிக்கு சென்று, 90 அடி மூங்கில் மரம் வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து, கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை எடுத்து வந்தனர். காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.தொடர்ந்து, 28ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், மார்ச், 8ம் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம்; 9ம் தேதி இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 10ம் தேதி காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்குதல், திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.வரும், 11ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் நிலை நிருத்தம், பட்டாபிஷேகம்; 12ம் தேதி இரவு போர் மன்னன் காவு நடக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X