| வாகன விபத்தில் அடிபட்ட புள்ளிமான் பரிதாப பலி Dinamalar
வாகன விபத்தில் அடிபட்ட புள்ளிமான் பரிதாப பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:28

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வாகனத்தில் அடிபட்டு இறந்த புள்ளிமான், வனத்தில் மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு கருமாபுரம் பிரிவு அருகே புள்ளிமான் ஒன்று, வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. இது குறித்து அவ்வழியாக சென்ற மக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் அறிவுறுத்தலின்படி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து, இறந்த மானை எடுத்து சென்றனர்.வனச்சரகர் கூறுகையில், ''கோவை அல்லது கோதவாடி பிரிவில் இருந்து வழி தவறி வந்த மூன்று வயது மதிக்கதக்க பெண் மான், வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளது.பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மற்ற விலங்குகளுக்கு உணவாக, வனத்தில் போடப்பட்டுள்ளது,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X