தீவிரம்:பாறையை அகற்றி ஆழப்படுத்தும் பணி... ; மூக்கையூரில் மீன் பிடி துறைமுகம் தயார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:57

சாயல்குடி:சாயல்குடி அருகே மூக்கையூர் மன்னார் வளைகுடா கடற்கரையில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் அமைந்துஉள்ளது. 2019 மார்ச் 4ல் முதல்வர் பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.



இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில்ரூ.113.90 கோடி திட்ட மதிப்பீட்டில் கடலுக்குள் நாட்டு படகுகள், விசைப்படகுகள் நிறுத்தும் வளாகம், மீனவர்கள் ஓய்வு அறை, வலை உலர்த்தும் கூடம்,பாதுகாப்பு உபகரணங்கள் அறை,கண்காணிப்பு கோபுரம், துறைமுக அலுவலக கூடம்,மீன் உலர்த்தும் தளம், மூக்கையூர் கடலுக்குள் 400 மீ., தரைப்பாலம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டது.நாட்டுப்படகுகள் மட்டுமே நங்கூரமிட்டும், கயிறு கட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது.



இங்கு விசைப்படகுகள் நிறுத்துவதற்கு போதிய ஆழம் இல்லாத நிலையால், சிரமத்திற்கு உள்ளாகினர்.மீனவர்களின் கோரிக்கையை அடுத்து துறைமுக வளாக பாலத்தில்கடலுக்கு அடியில் உள்ள சேறு மண்,சிறு பாறை கற்களை தோண்டி ஆழப்படுத்தும் பணிகள் நடக்கிறது.அக். முதல் டிச, வரை மழையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.



டிச. இறுதி வாரம் முதல்இரண்டு மிதவை படகில் நவீன முறையில் மணலை உறிஞ்சும் இயந்திரம் மூலம், போதிய ஆழத்தில்தோண்டப்பட்டு வருகிறது.மீனவர்கள் கூறியதாவது; அவசர கதியில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் திறக்கப்பட்டதில்,குறைகளை நிவர்த்தி செய்ய கோரியதன் பேரில்பணிகள் நடக்கிறது.இனி வருங்காலங்களில் விசைப்படகுகள் நிறுத்துவதற்கு வசதியாகஇருக்கும். இதன் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் மூக்கையூர் துறைமுகம் மைல் கல்லாக திகழும் என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X