| 30 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை 5 கி.மீ பயணிக்கும் மக்கள் Dinamalar
30 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை 5 கி.மீ பயணிக்கும் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
00:58

கமுதி:கமுதி அருகே 30 ஆண்டுகளாக சேதமடைந்த வாடகை ஓட்டுக் கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்க, 5 கி.மீ.,பயணிக்கும் அவல நிலைக்கு கிராம மக்கள் ஆளாகியுள்ளனர்.



கமுதி அருகே எம்.புதுப்பட்டி, எம்.புதுக்குளம், வலையபூக்குளம் கிராமங்களுக்கு, வலையபூக்குளத்தில் உள்ள ஓட்டு கூரையால் ஆன சேதமடைந்த வாடகை கட்டடத்தில், 30 ஆண்டுகளாக ரேஷன் கடை செயல்படுகிறது. எம்.புதுப்பட்டி, எம்.புதுக்குளம் கிராமங்களை சேர்ந்த 434 கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க 5 கி.மீ., பயணித்து வலையபூக்குளம் ரேஷன் கடையில் பல மணிநேரம் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லும் அவல நிலை உள்ளது.



ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக எம்.புதுக்குளம், எம்.புதுப்பட்டி கிராம மக்கள் ஒரு நாள் வேலையை விட்டு காத்திருக்கின்றனர். எனவே வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை அரசு கட்டடத்தில் செயல்படவும், தனியாக சர்வீஸ் சென்டர் மூலம், ரேஷன் பொருட்களை எம்.புதுப்பட்டி, எம்.புதுக்குளம் கிராம மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X