ஏ.டி.எம்., இயந்திரத்தில் கேமரா டிவைஸ் சர்வதேச கும்பலை சேர்ந்த நைஜீரியர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:02

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் கேமரா டிவைஸ் பொருத்திய விவகாரத்தில்,சர்வதேச மோசடி கும்பலைச் சேர்ந்த நைஜீரிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.



இதுகுறித்து சீனியர் எஸ்.பி., ராகுல்அல்வால் கூறியதாவது:புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை, அமுதசுரபி பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., சென்டரில், கடந்த 9ம் தேதி, ஏ.டி.எம். மிஷினில் ரகசிய குறியிட்டு எண் (பின் நம்பர்) பதிவு செய்யும் இடத்திற்கு மேல் பகுதியில், கேமராவுடன் கூடிய டிவைஸ் பொருத்தப்பட்டுஇருந்தது.இதுகுறித்தவீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. லாஸ்பேட்டை போலீசார், ஏ.டி.எம். மிஷினில் இருந்த டிவைசை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, ஏ.டி.எம்., மிஷின்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் க்ரைம் எஸ்.பி. சுபம் சுந்தர் கோஷ் தலைமையிலான குழுவினர்விசாரணை மேற்கொண்டனர்.அதில், சம்பவத்தன்று, காரில் வந்த மூன்று வெளிநாட்டினர் ஏ.டி.எம்., மிஷினில் கேமரா டிவைசை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.காரின் பதிவெண்ணை கொண்டு, சென்னையில் பதுங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஜஷ்சர் கிளஸ்டின்,29; என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில், நைஜீரியாவை சேர்ந்த ஜஷ்சர்கிளஸ்டின், சென்னையில் உள்ள மரைன் அக்காடமியில் படிப்பதற்காக மூன்று ஆண்டிற்கு முன் இந்தியா வந்துள்ளார். அவரது விசா ஓராண்டிற்கு முன் காலாவதியாகி உள்ளது. இவர், சர்வதேச மோசடி கும்பலைச் சேர்ந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மிலன் அலெக்ஸ்சான்ரோ, வெனிசூலாவைச் சேர்ந்த மில்டன் வல்டிமீர் கேர்னல் சம்பெர்னோ ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஏ.டி.எம். இயந்திரங்களில் கேமரா டிவைஸ் பொருத்தி, ஏ.டி.எம்., கார்டுகளின் தகவல் மற்றும் குறியீட்டு எண்களை திருடி, வௌிநாட்டில் விற்பனை செய்வது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஜஷ்சர் கிளஸ்டினை கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள மிலன் அலெக்ஸ்சான்ரோ, மில்டன் வல்டிமீர் கேர்னல் சம்பெர்னோ ஆகியோரை தேடிவருகின்றனர். அவர்களை பிடித்த பிறகே, இந்த கும்பல் வேறு எந்தந்த ஏ.டி.எம்., மையங்களில் டிவைஸ் பொறுத்தியுள்ளது. ஏற்கனவே எந்தந்த மையங்களி்ல தகவல் திருடியது என்பது தெரிய வரும்.சிப் ஏ.டி.எம். பாதுகாப்பானதுகடந்த காலத்தில் வங்கிகள் வழங்கிய கருப்பு காந்த பட்டை கொண்ட ஏ.டி.எம். கார்டுகளில் இருந்து ஸ்கிம்மர் கருவி மூலம் எளிதாக கார்டு தகவல்களை திருட முடியும். தற்போது வழங்கப்படும் 'சிப்' பொருந்திய கார்டுகளின் தகவல்களை திருடுவது சிரமம். எனவே, 'சிப்' பொருந்திய ஏ.டி.எம். கார்டுகளே பாதுகாப்பானது.ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் ஏலம்ஏ.டி.எம். கார்டு தகவல் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, வெளிநாடுகளில் சர்வதேச கள்ள சந்தையில் ஏலம் விடப்படும். ஒரு கார்டு தகவல் ரூ. 5000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஏலம் எடுப்பர். அந்த கார்டு தகவல்களை வாங்கிய கும்பல், புதிதாக ஒரு ஏ.டி.எம்., கார்டு தயாரித்து, வெளிநாட்டில் உள்ள ஏ.டி.எம்., அல்லது ஆன்லைன் வர்த்தகம் மூலம் வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் ஒரே நொடியில் எடுத்து விடுவர். இந்த சர்வதேச கும்பலை கண்டுபிடிப்பது எளிதான காரியமில்லை என்கின்றனர் போலீசார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X