அரசு விலையில்லா ஆடுகள் திட்ட பயனாளிகள் தேர்வில் முறைகேடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:14

பரமக்குடி:- பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்ட பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஒன்றிய பா.ஜ., சார்பில் கலெக்டர் வீரராகவராவிடம் புகார் அளித்தனர்.



வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு விலையில்லா ஆடுகள் வழங்கி வருகிறது.நயினார்கோவில் ஒன்றிய கிராமங்களில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்தன.இதையடுத்து பயனாளிகள் பட்டியல் 2019 அக்.10ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டது.



இதில் ஏற்கனவே பயனடைந்தவர்கள் உட்பட வசதி படைத்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது.இந்நிலையில், பிப்.19ல் நயினார்கோவில் ஒன்றிய பா.ஜ. சார்பில் கலெக்டர் வீரராகவராவிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இலவச ஆடுகள் வழங்க கோரி பயனாளிகள் ஒன்றிய அலுவலகம் அருகே கால்நடை மருந்தகம் முன்பு கூடினர்.



ஆனால் பயனாளிகளின் முறையான தேர்வுக்கு பிறகே ஆடுகள் வழங்கப்படும், என அதிகாரிகள் கூறியதால் கலைந்து சென்றனர்.நயினார்கோவில் பா.ஜ., ஒன்றியத் தலைவர் பிரபாகரன் கூறியதாவது: ஒன்றியத்தில் விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு குறித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளோம். இதையடுத்து நேற்று ஆடுகள் வழங்கப்படவில்லை. சரியான பயனாளிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதே போல் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X