தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 2021 முதல் 150 எம்.பி.பி.எஸ் சீட்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:18

ராமநாதபுரம்:தமிழக அரசு மருத்துவக்கல்லுாரிகள் அனைத்திலும் 2021-22ம் ஆண்டு முதல் 150 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.



ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி அமையும் பட்டணம்காத்தான் பூங்கா பகுதியில் முதல்வர் பழனிசாமி மார்ச் 1ல் அடிக்கல் நாட்டுகிறார். விழா மேடை அமைக்கும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது:



தமிழக அரசு மருத்துவக்கல்லுாரிகளில் 2021-22ம் ஆண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். ஓராண்டில் 11 மருத்துவக்கல்லுாரிகளுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருப்பது வரலாற்று சாதனை. இந்த 11 மருத்துவக்கல்லுாரிகளும் ரூ.3,575 கோடியில் அமைக்கப்படவுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடப்பணிகள் ஓராண்டில் நிறைவடையும்.



இந்த மருத்துவமனை 750 படுக்கைகளுடன், சர்வதேச தரத்துடன் கூடிய மருத்துவமனை சாதனங்களுடன் அமைக்கப்படவுள்ளது. மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்காக 300 டாக்டர்கள், 600 மருத்துவம் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். புதிய டாக்டர்கள், அலுவலர்கள் நியமனப் பணிகள் தொடங்கியுள்ளன, என்றார். கலெக்டர் வீரராகவ ராவ், கூடுதல் கலெக்டர் பீரதிப் குமார், சப்-கலெக்டர் சுகப்புத்திரா உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X