அதிகரிக்கும் ஜூஸ் கடைகள் கேள்விக்குறியாகும் சுகாதாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:25

திருப்புவனம்:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சுகாதாரமற்ற தற்காலிக ஜூஸ் கடைகளால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.



வழக்கமாக மார்ச் கடைசியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது வழக்கம், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பிப்ரவரியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில் அதிகளவு வெப்பம் பதிவாகி உள்ளது. வெயிலின் தாகத்தை தணிக்க ஆங்காங்கே தற்காலிக ஜூஸ் கடைகள் அதிகரித்துள்ளன.



பலரும் ரோட்டோரம் ஜூஸ் கடைகளை திறந்துள்ளனர். போதிய சுகாதாரம் இன்றி வழங்கப்படும் பழச்சாறுகளை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். பல கடைகளில் டம்ளர்களை சுத்தமாக கழுவுவது கிடையாது, மேலும் ஜூஸ் தயாரிக்க சுகாதாரமற்ற தண்ணீரையே பயன்படுத்துகின்றனர். ஜூஸ் கடைகளை சுற்றிலும் ஈக்கள் படையெடுத்து வருகின்றன. துருப்பிடித்த கத்திகளை பயன்படுத்தி பழங்களை நறுக்குகின்றனர். ஐஸ்கட்டிகளையும் சுகாதாரமற்ற முறையில் வைத்து மக்களுக்கு வழங்குகின்றனர்.



மதுரை--ராமேஸ்வரம் ரோட்டில் திருப்புவனத்தை ஒட்டி 10க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக ஜூஸ் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. செல்லப்பனேந்தல் விலக்கு அருகே குப்பை கொட்டும் இடத்தில் வைத்து ஜூஸ் விற்பனை நடைபெறுகிறது.



சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளாததால் பலரும் சுகாதாரமற்ற முறையில் பழச்சாறுகள், சர்பத் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X