| அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கு Dinamalar
அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:34

பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே, வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லுாரியில், அறிவுசார் சொத்துரிமை கருத்தரங்கு நடந்தது.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் ஆகியன இணைந்து, இக்கருத்தரங்கை நடத்தியது. பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். ராமகிருஷ்ண இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் அலமேலு தலைமை வகித்தார். கோவை அரசினர் பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் பேசினார். சென்னையில் உள்ள இந்திய அரசின், உள்வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் துணை கட்டுப்பாட்டாளர் பிரசாத் ராவ், அறிவுசார் சொத்துரிமை பதிவு செய்தல் மற்றும் அதன் வழிமுறை குறித்து விளக்கினார்.இக்கருத்தரங்கில் கோவை, திருப்பூர், நாமக்கல், பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் ஈரோடு பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X