| பண்ணாரி அம்மன் தொழில்நுட்பகல்லுாரியில் ஆண்டு விழா Dinamalar
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பகல்லுாரியில் ஆண்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:35

அன்னுார்: சத்தி, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியின் 24 வது ஆண்டு விழா கல்லுாரி கலையரங்கில் நடந்தது. இதில், பண்ணாரி அம்மன் குரூப் சேர்மன் எஸ்.வி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசுகையில், ''செய்யும் பணியில் ஈடுபாடும், விடா முயற்சியும், ஊக்கமும் இருந்தால், வெற்றி பெறலாம். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பொறியியல் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது,'' என்றார்.கல்லுாரி அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக, பொன் பியூர் கெமிக்கல் நிறுவன தலைவர் பொன்னுச்சாமி, ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி இணை அறங்காவலர் சுதா மோகன்ராம் ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறந்த மாணவருக்கான சுப்பையா விருது, மாணவன் சுசிலுக்கும், சிறந்த மாணவிக்கான பங்கஜாட்சி விருது மாணவி மித்ராவுக்கும் வழங்கப்பட்டது. துறை தலைவர்கள், தங்கராஜ், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X