தினசரி காய்கறி சந்தை கட்டணத்தை நகராட்சி வசூலிக்குமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:36

தேவகோட்டை:தேவகோட்டை தினசரி சந்தையில் கடை வாடகையை நகராட்சியே தொடர்ந்து வசூலிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தேவகோட்டை நகராட்சி தினசரி மார்க்கெட்டில் 300 கடைகள் உள்ளன. இவை தவிர நகர் முழுவதும் ஏராளமானோர் சிறிய அளவில் கடை அமைக்கின்றனர்.இந்த கடைகளில் வாடகை வசூல் செய்ய தனியார் குத்தகைக்கு எடுத்து வாடகை வசூல் செய்தனர். நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூல் செய்யப்பட்டது.



இதனால் ஆர்ப்பாட்டம் , போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக 2001 முதல் நகராட்சியே நேரடியாக வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நகராட்சியே வாடகையை வசூல் செய்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் முறைப்படுத்தப்படாத நிலையில் வாடகை வசூலித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கமிஷனர் கடைகளை அளந்து , கடைகளின் அளவிற்கேற்ப கட்டணத்தை நிர்ணயம் செய்தார்.



அதன்படியே நகராட்சி ஊழியர்கள் தற்போது கட்டணம் வசூல் செய்கின்றனர். தினமும் ரூ. 12 ஆயிரம் வரை வசூலாகிறது. ஆண்டுக்கு ரூ. 43 லட்சம் வசூலாகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் மீண்டும்வாடகை வசூல் செய்ய தனியாருக்கு டெண்டர் விடப்போவதாக நகராட்சி அறிவித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.நேற்று ஏலம் கேட்க குத்தகைதாரர்கள் யாரும் பணம் கட்டவில்லை. தினசரி மார்க்கெட் வியாபாரிகள் கூடி விவாதித்தனர்.



தங்கள் கோரிக்கைக்கு கலெக்டர், நகராட்சி மாநில ஆணையர், நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தர வேண்டும் எனவும், நேரடியாக வசூல் செய்வது மூலம் நகராட்சிக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை விளக்கி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X