கரூர் - கோவை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் வந்தால் வடக்கு வாழும்! கோவை வடக்கு பகுதி மக்களின் தீவிர எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 பிப்
2020
03:44
பதிவு செய்த நாள்
பிப் 22,2020 01:36

அன்னுார்: அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, கரூர் - கோவை, ஆறுவழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, அன்னுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னுார் பகுதி மக்கள், கோவை, அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டுக்கு, கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தே செல்கின்றனர். நாளுக்கு நாள், டூ வீலர் மற்றும் கார்களின் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது. ஆனால், அதற்கு ஏற்ப ரோடு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை.கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையிலும், கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையிலும் தினமும் விபத்துகள் நடக்கிறது. இதற்கு தீர்வாக, கோவை- கரூர் ஆறுவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. கரூரிலிருந்து, கோவைக்கு புதிதாக பசுமை வளாக அடிப்படையில், எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.



இந்த சாலை, ஆறு வழிச்சாலையாக, 200 அடி அகலத்தில், சர்வீஸ் சாலையுடன் அமைய உள்ளது. கரூர் மாவட்டம், ஈமூரிலிருந்து, கோவை மாவட்ட எல்லை வரை 99.9 கி.மீ., துாரமும், அங்கிருந்து கோவைக்கு வடக்கே, 43.2 கி.மீ., தொலைவில், கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகில் இணைகிறது.



இந்த சாலைஅமைக்கப்பட்டால், கரூரிலிருந்து கோவை எல்லை வரை வரும் துாரம், 21 கி.மீ., குறையும்.மாநகராட்சி பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பில், இரண்டரை மடங்கு தொகையும், மாநகராட்சி அல்லாத பகுதியில், மூன்று மடங்கும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் சூலுார், அன்னுார், கோவை வடக்கு, மதுக்கரை, கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தாலுாகாக்களில் நிலம் கையகப்படுத்த உள்ளன.



இதற்கான பணி திருப்பூர் மாவட்டத்தில் நடக்கிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் இன்னும் துவங்கவில்லை.இது குறித்து அன்னுார் மக்கள் கூறியதாவது:இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவையின் வடக்கு பகுதி மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள், கோவை நகருக்குள் செல்லாமல், அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டை எளிதில் அடையலாம். போக்குவரத்து நெரிசல் இருக்காது. காத்திருப்பும், விபத்துகளும் குறையும். ஆறு வழிச்சாலை அமைப்பதால் அருகிலுள்ள நிலங்கள் மதிப்பு பெறும். புதிய குடியிருப்புகள் உருவாகும். வாகனங்களுக்கு எரிபொருள் செலவு குறையும். அன்னுாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது.



ஆனால், இன்னமும் பணி துவங்கவில்லை. விரைவில் இதற்கான பணியை துவக்க வேண்டும்.நீலகிரி எம்.பி., ராஜா, இத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணியை விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.நிலம் 2,997 ஏக்கர் தேவைகோவைக்கு தெற்கே, 38.4 கி.மீ., தொலைவில், ஒத்தக்கால்மண்டபம் அருகே, இணையும் இந்த சாலையால், கோவை, கரூர் ஆகிய இரு தொழில் நகரங்கள் இணையும். பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.



இத்திட்டத்திற்காக, கரூர் மாவட்டத்தில், 617 ஏக்கர் நிலமும், திருப்பூர் மாவட்டத்தில், 1,270 ஏக்கர் நிலமும், கோவை மாவட்டத்தில், 1,110 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது, குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) உள்கட்டமைப்பு மிகவும் அவசியம் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X