| தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Dinamalar
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
01:36

பெ.நா.பாளையம்: பயனியர் கலை, அறிவியல் கல்லூரியில், இன்று, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.



கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் கோவை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து, பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஜோதிபுரத்தில் உள்ள பயனியர் கலை, அறிவியல் கல்லூரியில், தனியார் வேலைவாய்ப்பு முகாமை, இன்று நடத்துகிறது. இதில், படிக்காதவர்கள் முதல் 10ம் வகுப்பு, பிளஸ், 2 வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், தொழில் கல்வி பயின்றவர்கள், ஐ.டி.ஐ., படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், மற்றும் டிப்ளமோ, கல்வித் தகுதி உடையவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். இதில், தனியார் துறையில் வேலை அளிப்போர் கலந்துகொண்டு, ஆட்களை, தேர்வு செய்ய உள்ளனர். இதில், கலந்து கொள்வோர், எவ்வித கட்டணமும் இல்லை. இதில், தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை, அப்போதே வழங்கப்படும்.வேலைவாய்ப்பு பெறும் மனுதாரர்கள், தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவை, அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை, புதுப்பித்துக் கொள்ளலாம். அவை எக்காரணத்தைக் கொண்டும், ரத்து செய்யப்பட மாட்டாது. இத்தகவலை, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் ஜோதிமணி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X