மஹா சிவராத்திரி விழா கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:29

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானை தரிசித்தனர்.



மஹா சிவராத்திரியான நேற்று, சென்னை, புறநகரில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரம், நான்கு கால பூஜைகள் நடந்தன.வடபழநி முருகன் கோவில்வடபழநி முருகன் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 4:30 மணி, மஹா பிரதோஷ காலம் முதல், நான்கு காலங்களிலும் சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.+



ஒவ்வொரு கால அபிஷேக வேளையில், ருத்ர பாராயணமும், அதை தொடர்ந்து பஜனை நடைபெற்றது. நேற்று இரவு, 8:30 மணிக்கு புவனேஸ்வரி, சீனிவாசனின் சிவ மகிமை வேத கோஷம், வீணை பாராயணம் நடந்தது.இரவு, 11:00 மணிக்கு வீரமணி ராஜுவின் மகன் அபிஷேக் ராஜுவின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் பஜன்ஸ் நடந்தது.முதல் கால பூஜை துவக்கத்தில் இருந்து அதிகாலை, 6:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரமும், விதவிதமான பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.



சக்ர விநாயகர் கோவில்:



தி.நகர், சக்ர விநாயகர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று மாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து வேம்பு பாகவதர் குழுவினரின் பஜனை நடந்தது.இரவு, 7:00 மணி முதல் அதிகாலை, 7:00 மணி வரை, நான்கு கால ஹோமங்கள், பஞ்சாஷ்ர வில்வ ஹோமம், பஞ்சமுக கேதாரகவுரி ஹோமம், மஹா மிருத்தயுஞ்ஜய ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.



அதேபோல, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும், பலர் தானம் செய்தனர்.



- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X