'தமிழை உயர்த்த வேண்டியது இளைஞர்களின் கடமை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:30

சென்னை : ''உலக பயன்பாட்டு மொழி பட்டியலில், தமிழை உயர்த்த வேண்டியது, இளைஞர்களின் கடமை,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.



தரமணி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று, உலகத் தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. அதில், பல்வேறு தலைப்புகளில், நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவை துவக்கி வைத்து, அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில், பெரும்பான்மையாக பேசப்பட்ட, வங்க மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, போராடியவர்களில் பலர் உயிரிழந்தனர். அது, தாய்மொழி மீதான பற்றை அதிகரிக்கச் செய்து, ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாறி, தனி நாடு கிடைக்கவும் காரணமாக அமைந்தது.



இந்த தாய்மொழிக்கான போராட்டத்தின் அடிப்படையில், 'யுனெஸ்கோ' அமைப்பு, உலகில் உள்ளோர் தாய்மொழியை பேசவும், எழுதவும் சுதந்திரத்தை வழங்கும் வகையில், அவர்கள் உயிர்நீத்த நாளை, உலக தாய்மொழி தினமாக அங்கீகரித்தது.அதிக மக்களால் பயன்படுத்தும் மொழியாக, ஆங்கிலம் உள்ளது.அடுத்த இடத்தில், சீனாவின் மான்டிரின் மொழியும், 14வது இடத்தில் தமிழும் உள்ளது. உருது, அரபி உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக, ஹிந்துஸ்தானி என்ற பெயரில், ஹிந்தி வருவதால், பல நாடுகளில் பேசப்படுவோர் என்ற கணக்கில், தமிழை விட, ஹிந்தி முந்திக் கொள்கிறது.



தற்காலத்தில், அச்சு, காட்சி, இணைய, சமூக ஊடகங்களில், அதிக பயன்பாட்டில் உள்ள மொழிகளின் பட்டியலில், ஆங்கிலம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழ், 14வது இடத்தில் தான் உள்ளது. உலக மொழிகளின் பயன்பாட்டுப் பட்டியலில், தமிழை மேம்படுத்தவும், தமிழ் மொழியை தொடர்ந்து காக்கவும், இளைஞர்கள் பாடுபட வேண்டும். வேற்று மொழி எழுத்தின் மீது, தார் பூசி அழித்து, தாய்மொழிப் பற்றைக் காட்டுவதை விட, சமூக வலைதளங்கள், இணையதள கட்டுரைகள், 'விக்கிபீடியா' தகவல்கள் உள்ளிட்ட அனைத்திலும், தமிழைப் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X