சென்னை போலீசாருக்கு 'கடிவாளம்' கட்டிய கமிஷனர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:38

சென்னை : வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.



சென்னை போலீஸ் கமிஷனராக, ஏ.கே.விஸ்வநாதன் பதவி ஏற்றபின், சட்டம் - ஒழுங்கு மட்டுமல்லாமல், போக்குவரத்து துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.சென்னை முழுவதும் அமைக்கப்பட்டு வரும், 'மூன்றாவது கண்' என அழைக்கப்படும், கண்காணிப்பு கேமராவை, அவரது முயற்சிக்கு உதாரணமாக கூறலாம். இதன் வாயிலாக பல குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோல், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண பேருதவியாக இருந்தது.



இந்நிலையில், சமீப காலமாக போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறின. இதையடுத்து, போலீசார் லஞ்சம் வாங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை தடுக்கும் விதமாக, அபராதத் தொகையை, பணமில்லா டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் முறையை கொண்டு வந்தார்.



அதன்பின்னும், மோதல் சம்பவங்கள் தொடர்ந்ததையடுத்து, இதற்கு தீர்வு காணும் விதமாக, அபராதம் விதிக்கும் அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும், சட்டையில் கேமரா பொருத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் வாயிலாக, தகராறில் ஈடுபடுவோர் யார் என்பதை, காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



கமிஷனரின் இந்த நடவடிக்கையால், போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகள் தகராறில் ஈடுபடுவது முற்றிலுமாக தடுக்கப்படும். கமிஷனரின் இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
28-பிப்-202001:24:45 IST Report Abuse
Ravi Chandran இதைத்தான் சீமான் முன்பே செய்வதாக சொன்னார். அதை செயல் படுத்திய கமிஷனருக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
sambantham sasikumar - chennai,இந்தியா
26-பிப்-202017:09:06 IST Report Abuse
sambantham sasikumar கேமரா இல்லாமல் அடாவடி செய்யும் போலீஸ் என்ன செய்வது.
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
26-பிப்-202014:06:12 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் திரு ஏ.கே.விஸ்வநாதன் மிகைத்திறம்பட பணியாற்றியுள்ளார். இத்தனைக்கும் கண்டிப்பு இல்லை. யாரையும் பகைத்தது இல்லை. மக்கள் - காவல்துறை - அரசியல் - அரசாங்கம் என அனைத்து தரப்பையும் சம அந்தஸ்து கொடுத்து நடத்துகிறார். அவர் மென்மேலும் சிறக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X