மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:40

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள், 'லெக்கின்ஸ், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.



தமிழக கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், கட்டுப்பாடின்றி ஆடை அணிந்து வருவது குறித்து, தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, 2016ம் ஆண்டு, இது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வேட்டி, சேலை, சல்வார், சுடிதார் அணிந்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல உத்தரவிட்டனர்.இது தொடர்பாக, பல கோவில்களில், அறநிலையத் துறை சார்பில், விளம்பர பலகை வைக்கப்பட்டது. ஆனால், ஆடைகள் அணிவது தொடர்பான சர்ச்சை எழுந்ததால், அந்த உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை.



மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வந்து செல்வது வழக்கம்.கடந்த வாரம், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், அநாகரிகமாக உடை அணிந்து வந்தனர்.இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்திற்கும், வெளிநாட்டினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கபாலீஸ்வரர் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளம்பர பலகையும், சமீபத்தில் வைக்கப்பட்டுள்ளது.



அதில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள், பாரம்பரியமான சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி, துப்பட்டாவுடன் சுடிதார், பஞ்சாபி உடை அணிந்து வர வேண்டும்.டி - சர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போன்ற உடைகளை பெண்கள் அணிந்து வரக்கூடாது. அதேபோல, வேட்டி - சட்டை, முழுக்கால் பேன்ட், சட்டை, ஷர்வானி ஆகிய உடைகளை ஆண்கள் உடுத்தி வரலாம்.கைலி, அரைக்கால் பேன்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-பிப்-202009:09:37 IST Report Abuse
Natarajan Ramanathan இந்தவாரம் சனிக்கிழமை பெசன்ட்நகர் பீச் போகனும்....
Rate this:
Cancel
Vel - Chennai,இந்தியா
22-பிப்-202010:46:44 IST Report Abuse
Vel ஹரி ஓம்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
22-பிப்-202007:34:03 IST Report Abuse
chennai sivakumar Please do something for beach also. Especially fri,sat ore kandraavi dressing in besant nagar beach.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X