போலீஸ் டைரி,.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:42

மாணவரிடம் 2 சவரன் பறிப்பு



புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, சாத்துமா நகரைச் சேர்ந்தவர் யுகேந்திரா, 20; தனியார் கல்லுாரி மாணவர். நேற்று, ராயபுரத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு, டூ - வீலரில் சென்று, காசிமேடு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக வீடு திரும்பினார். அப்போது, மர்ம நபர்கள் நால்வர், கத்தியை காட்டி மிரட்டி, யுகேந்திராவிடம் இருந்த மொபைல்போன், 2 சவரன் தங்க செயினை பறித்து தப்பினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.



கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து



சூளைமேடு: ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் கோபி, 21. இவர் நேற்று, உறவினர் ஒருவரின் சவ ஊர்வலத்தில் சென்றார். சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலத்தில் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் உட்பட, ஐந்து பேர் கோபியிடம் தகராறு செய்தனர். பின் கத்தியால் முகத்தில் குத்தி தப்பினர். இதில் காயமடைந்த கோபி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரித்த சூளைமேடு போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட, 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் விதன் குமார், 20, பரிஸ், 18 ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.



வணிக வரி துறை அதிகாரிக்கு சிறை



சென்னை: காஞ்சிபுரம் வணிக வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் எம்.கே.மனோகரன். 2004 -- 2009ம் ஆண்டு பணிக் காலத்தில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம் பிரகாஷ் முன் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X