படப்பிடிப்பில் விபத்து; கமல், சங்கருக்கு சம்மன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
04:43

பூந்தமல்லி : இந்தியன் - 2 படப்பிடிப்பில், ராட்சத, 'கிரேன்' விழுந்து, மூவர் இறந்த சம்பவத்தில், நடிகர் கமல், இயக்குனர் சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.



பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில், ஈ.வி.பி., பிலிம் சிட்டியில், இந்தியன் - 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்கு, 19ம் தேதி இரவு, 100 அடி உயரத்தில், விளக்குகளை தாங்கியபடி இருந்த ராட்சத கிரேன் விழுந்து, மூவர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக, கிரேன் ஆப்பரேட்டர் ராஜன், படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட நான்கு தரப்பினர் மீது, விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருத்தல் உள்ளிட்ட, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இதற்கிடையே, காயமடைந்தவர்கள் சிலர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒரு சிலர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில், நசரத்பேட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.



காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்த, சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த போது, இயக்குனர் சங்கர், நடிகர் கமல் ஆகியோரும் இருந்ததால், அவர்களிடமும் விசாரணை நடத்த, சம்மன் அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த கிரேன் ஆப்பரேட்டர், கேரளாவைச் சேர்ந்த ராஜனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X