| சேலத்தில் 'திகில்' ஏற்படுத்திய 'சைக்கோ': ஆய்வக சோதனையில் உறுதியானதால் கைது Dinamalar
சேலத்தில் 'திகில்' ஏற்படுத்திய 'சைக்கோ': ஆய்வக சோதனையில் உறுதியானதால் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
08:58

சேலம்: மூன்று கொலைகளை செய்து, சேலத்தில் பீதியை ஏற்படுத்தியவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்கோ என்பது, ஆய்வக சோதனையில் உறுதியானதால், போலீசார் கைது செய்தனர்.


சேலத்தில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ்; பழைய பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம்; கலெக்டர் அலுவலகம் அருகேவுள்ள பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தூங்கிய முதியோர்களை, அடுத்தடுத்து நாள் இரவில், மர்ம நபர், கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம், மக்கள் இடையே, பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொலையாளியை பிடிக்க, கடந்த, 3 முதல், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 5ல், கோரிமேட்டில் சுற்றிய வாலிபரை சந்தேகப்பட்டு, ரோந்து போலீசார் பிடித்து, டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரித்ததில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆண்டிச்சாமி, 37, என்பதும், மூன்று கொலைகளை செய்ததும், அவரே ஒப்புக்கொண்டார். அவர், 'சைக்கோ' என்பதால், கொலையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, கொலை நடந்த இடங்களில் உள்ள தடயங்களை, சென்னை, பெங்களூருவில் உள்ள ஆய்வகங்களுக்கு போலீசார் அனுப்பினர். அதில், ஆண்டிச்சாமியே கொலை செய்தது உறுதியானது. அதன் அறிக்கை அடிப்படையில், நேற்று, போலீசார், அவரை கைது செய்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X