| தமிழகத்தை விட ஜவ்வரிசி விலை குறைவு: வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுப்பு Dinamalar
தமிழகத்தை விட ஜவ்வரிசி விலை குறைவு: வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
09:03

சேலம்: சேலம், சேகோ சர்வின் விலையை விட, ஆந்திராவில் ஜவ்வரிசி விலை குறைவு, போக்குவரத்து செலவும் குறைவு என்பதால், வியாபாரிகள் ஆந்திராவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.


சேலம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயார் செய்யப்படும் ஜவ்வரிசி, ஸ்டார்ச், சேலத்தில் உள்ள சேகோ சர்வ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 2018 டிசம்பர் வரை, சேகோ சர்வ் மட்டுமின்றி வியாபாரிகளும், ஜவ்வரிசி, ஸ்டார்ச்சை வடமாநிலங்களுக்கு அனுப்பி வந்தனர். சேகோ சர்வில், கடந்த, 2018 டிச.,12 முதல், ஸ்டார்ச், ஜவ்வரிசி ஆகியவை, ஆன்லைன் விற்பனை மூலம், இ - வே பில்லிங் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் வரை, 90 கிலோ கொண்ட முதல்தர ஜவ்வரிசி மூட்டை, 2,400 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையும், ஸ்டார்ச், 2,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஜவ்வரிசி மூட்டை, 4,350 ரூபாய்க்கும், ஸ்டார்ச் மூட்டை, 3,055 ரூபாய்க்கு விற்பனையானது. ஆந்திராவில், மூட்டை ஜவ்வரிசி, 4,000 ரூபாய்க்கும், குறைந்த அளவில் தயார் செய்யப்படும் ஸ்டார்ச், 2,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழகத்தை விட ஆந்திராவில் விலை குறைவு என்பதால், சேலம், நாமக்கல் மாவட்ட வியாபாரிகள், ஆந்திரா மாநிலத்துக்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச் கொள்முதல் செய்ய படையெடுத்துள்ளனர்.


இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து மஹாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு, ஜவ்வரிசி, ஸ்டார்ச்சை ஆந்திரா மாநிலத்தின் வழியாகத் தான் அனுப்ப வேண்டியது உள்ளது. தமிழகத்தை விட ஆந்திராவில் விலை குறைவு என்பதோடு, தமிழகம் - ஆந்திரா இடையிலான போக்குவரத்து செலவு குறைவு என்பதால், வடமாநில வியாபாரிகளின் ஆர்டர்களுக்கு, ஆந்திராவில் இருந்து ஜவ்வரிசியை கொள்முதல் செய்து அனுப்பி வருகிறோம். ஆந்திராவில் உள்ள, 25 கிழங்கு மாவு மில்களில், 15 மட்டுமே கடந்த மாதம் வரை இயங்கின. தமிழக வியாபாரிகளின் ஆர்டரால், அனைத்து ஆலைகளும் இயங்க துவங்கி உள்ளதால், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X