ஏழைகளுக்காக இலவச 'அமரர்' ஊர்தி சேவை: சேலம் 'புதிய வெளிச்சம்' இளைஞர்கள் அர்ப்பணிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
09:04

வீரபாண்டி: ஏழைகளுக்காக இலவச அமரர் ஊர்தி சேவையை துவக்கி, சேலம் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.


சேலம், பொன்னம்மாபேட்டையைச் சுற்றியுள்ள இளைஞர்கள், 2017ல், 'புதிய வெளிச்சம்' எனும் சேவை அறக்கட்டளையை தொடங்கினர். ஏழைகளுக்கு பல்வேறு உதவி செய்துவந்த அவர்கள், கடந்த, 2ல், இலவச, 'அமரர்' ஊர்தி சேவையை தொடங்கியுள்ளனர்.


இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் தனபால் கூறியதாவது: ஏதாவது ஒரு வகையில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமுடைய நண்பர்கள் இணைந்து, 2017ல், அறக்கட்டளையை தொடங்கினோம். ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த, 25 உறுப்பினர்கள், அறக்கட்டளை மூலம், தொடக்கத்தில், எங்கள் பகுதியில் மரக்கன்று நட்டு பராமரித்தோம். ஞாயிறுதோறும், தெருவோரம் வசிப்போருக்கு, காலை, இரவில் உணவு சமைத்து, பொட்டலம் கட்டி வழங்கிவருகிறோம். இப்பணி, 150 வாரங்களை கடந்து, தொடர்ந்து வருகிறது. அதேபோல், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, உழவர் சந்தைகளுக்கு சென்று, 'கேரிபேக்' கொண்டு வந்துள்ள மக்களிடமிருந்து, அதை வாங்கிக்கொண்டு இலவசமாக துணி பைகளை கொடுத்து வருகிறோம். தற்போது, ஏழைகளுக்கு இலவச அமரர் ஊர்தி சேவையை தொடங்கியுள்ளோம்.இது, சேலத்தைச் சுற்றி, 15 கி.மீ., தூரத்தில், ஏழைகள் எங்கு இறந்தாலும், அவரது உடலை, மயானத்துக்கு இலவசமாக எடுத்துச்செல்ல பயன்படும். அறக்கட்டளை உறுப்பினர்கள், மாதந்தோறும் செலுத்தும், 300 ரூபாய் சந்தா தொகை, உதவும் மனிதர்களின் பங்களிப்புடன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், பயன்பாட்டிலிருந்த ஆம்னி வேனை வாங்கி, அமரர் ஊர்திக்கு தேவையான வசதிகளை அமைத்து, இச்சேவையை தொடங்கியுள்ளோம். இதுகுறித்த தகவல், மக்களிடம் முழுமையாக சென்றடையாததால், இச்சேவைக்கு யாரும், இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. விரைவில், 'பசியில்லா சேலம்' எனும் திட்டத்தை தொடங்கி, விருந்து விழாக்களில் மீதமாகும் உணவை, அவர்கள் இடத்துக்கே சென்று வாங்கி, பசியால் வாடுபவர்களின் இருப்பிடத்துக்கு சென்று வழங்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இவர்களது சேவையை பயன்படுத்திக்கொள்ளவோ அல்லது பாராட்டவோ, 99526 28944 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X