உயர்த்தப்பட்ட சத்துணவு செலவினத்தொகை கிடைக்குமா? விலைவாசி உயர்வால் அமைப்பாளர்கள் பரிதவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
09:04

சேலம்: உயர்த்தப்பட்ட சத்துணவு செலவினத்தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல், அமைப்பாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில், 1,818 சத்துணவு மையங்கள் உள்ளன. அதில், இரண்டு லட்சத்து, 9,710 மாணவ, மாணவியர், சத்துணவு உட்கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும், காய்கறி, மளிகை பொருள், காஸ் பயன்பாடு என, செலவினத்தொகை ஒதுக்கப்படுகிறது. அதில், இரு வகை செலவினத்தொகை தனித்தனியே உண்டு. அதன்படி, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சாம்பார் சாதம் வழங்கும் நாளில், ஒருவருக்கு தலா, ஒரு ரூபாய், 30 காசு, பருப்பு உபயோகமற்ற, கலவை சாதம், வெஜ் பிரியாணி பரிமாறும் நாளில், ஒரு ரூபாய், 70 காசு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, சாம்பார் சாத செலவுக்கு, ஒரு ரூபாய், 40 காசு, இதர நாளில், ஒரு ரூபாய், 80 காசு வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்வால், செலவினத்தொகையை உயர்த்தக்கோரி, சத்துணவு அமைப்பாளர்கள் மன்றாடி வந்தனர். அதனால், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, பருப்பு சாதம் வழங்க, ஒரு ரூபாய், 75 காசு, பருப்பு இல்லாத நாளில், இரண்டு ரூபாய், 28 காசு, ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, சாம்பார் சாதத்துக்கு, ஒரு ரூபாய், 89 காசு, பருப்பு இல்லாத நாளில், இரண்டு ரூபாய், 42 காசாக உயர்த்தி, 2019, நவ., 2ல் அரசு உத்தரவிட்டது. அதே ஆண்டு, டிச., 2ல், அந்த உத்தரவு அமலுக்கு வந்தது.


இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது: உயர்த்தப்பட்ட சத்துணவு செலவினத்தொகை, இன்னமும் சேலம் மாவட்டத்தில் கிடைக்கவில்லை. பலமுறை முறையிட்டும் பலனில்லை. குறிப்பாக, மூன்று மாதங்களுக்கு செலவினத்தொகையை முன்னதாக வழங்க வேண்டும். இதுவரை, ஒருமுறை கூட அப்படி தரவில்லை. ஒவ்வொரு, மூன்று மாத தொகை, செலவு செய்த பின், மல்லுக்கட்டி வாங்க வேண்டியுள்ளது. காஸ், காய்கறி, மளிகை பொருள் விலை உயர்ந்தும், உயர்த்தப்பட்ட சத்துணவு செலவினத்தொகையை இன்னும் விடுவிக்காமல் உள்ளனர். செலவினத்தொகை தாமதமாக வழங்குவதால், கடன் வாங்கி, சமைப்பதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, உயர்த்திய செலவினத்தொகையை பெற்று தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


கலெக்டரின் நேர்முக (சத்துணவு) உதவியாளர் விஜயகுமாரி கூறுகையில், ''உயர்த்தப்பட்ட செலவினத்தொகை, ஒருவாரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான கோப்பு தயாராகி வருகிறது. அமைப்பாளர்கள், செலவின பட்டியல் கொடுத்ததும், மூன்று மாத தொகை முன்னதாக வழங்கப்படும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X