| தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: குளிர்சாதன பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு Dinamalar
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: குளிர்சாதன பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
09:04

சேலம்: கோடை துவங்கியதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு குளிர்சாதன பஸ்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. காலை பொழுதில் பனி, குளிர்காற்று வீசிய போதிலும், 9:00 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்குகிறது. பகல் நேரங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பகல் நேரத்தில் பஸ்சில் பயணிப்பவர்கள் மட்டுமின்றி, இரவு நேரங்களில் பயணிப்போரும் குளிர்சாதன பஸ்களை நாடத் துவங்கி உள்ளனர். சேலம், வேலூர், தர்மபுரி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட முக்கிய நகரங்களுக்கு இடையே தற்போது இயக்கத்தில் உள்ள, பிற கோட்டங்களின் சார்பில், 150 பஸ்கள், விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் இயக்கப்படும், 150 குளிர்சாதன பஸ்கள் நிரம்பி வழிகின்றன. தமிழகம் முழுவதும், கடந்த, இரண்டு வாரங்களாக குளிர்சாதன பஸ்கள் மூலம் போக்குவரத்துக்கழகங்களுக்கான வருவாய் எகிறி துவங்கி உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது வெப்பம், அனல் காற்றில் இருந்து பயணிகளை காக்கும் வகையில், மேலும், 150 குளிர்சாதன பஸ்களை, ஏப்ரல் முதல் வாரத்தில் இயக்கத்துக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X