ஆலங்குப்பத்தில் ரயில்வே சுரங்கப் பாதை பணி துவக்கம்! போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2020
23:57

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் சாலையில் ஆலங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளது.



திருவெண்ணெய்நல்லுார் - அரசூர் சாலை ஆலங்குப்பம் ரயில்வே கேட் வழியினை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் அவ்வழியாக சென்று வருகிறது. ரயில்வே கேட் மூடும் போது, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக காலை நேரங்களில் ரயில் கடப்பதற்கு முன் ரயில்வே கேட் மூடும்போது, நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. ரயில்வே கேட் திறந்தவுடன், ரயில் பாதையை வாகனங்கள் கடக்கும் போது போட்டி போட்டு கொண்டு ஒன்றோடொன்று இடித்து செல்லும் சூழ்நிலையை காணமுடிகிறது.இந்நிலையில், இருவழி ரயில் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து, ரயில் போக்குவரத்து அதிகரிப்பினால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், நாள்தோறும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அலுவலர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.



இதனையொட்டி, ரயில்வே கேட் மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு டிச., 26ம் தேதி அப்பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது. சுரங்கப் பாதைக்கான 22 ரெடிமேட் பிரிகேஸ்ட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு, வரும் ஜூன் மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.




தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு கிரேன் மூலம் பிரிகேஸ்ட் பாக்ஸ்கள் பொருத்தி சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சுரங்கப் பாதை 90 மீட்டர் துாரம் அமைக்கபடவுள்ளது. பிரிகேஸ்ட் பாக்ஸ்கள் கட்டுமானம் பணியின் போது, இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.கார், ஆட்டோ, வேன், பஸ்கள் போன்ற வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் சுற்றி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலங்குப்பம் ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் முழுமை பெற்றவுடன் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X