கிசான் அட்டை பெற கால நீட்டிப்பு வழங்க விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
01:00

உளுந்துார்பேட்டை : கிசான் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை வரையறை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் வருவாய்த்துறை சம்பந்தமாக சிட்டா பட்டா வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற அளவில் மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதற்காக ஆன் லைனில் மாற்றம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதால், சிட்டா பட்டா கேட்டு ஆன்லைனில் பதிவு செய்யவும், வருவாய் தொடர்பான தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இதனால் விவசாயிகள் கணினி சேவை மையங்கள், இ - சேவை மையங்களில் சிட்டா, பட்டா பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இதனிடையே விவசாயிகளுக்கு மத்திய அரசு மூலம் கடன் அட்டை வழங்கும் திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து சிட்டா, பட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.கடன் அட்டை பெறுவதற்கு சிட்டா, பட்டா, அடங்கல் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்காக விண்ணப்பிக்க 24ம் தேதி அறிவிக்கப்பட்டது.



விவசாயிகளுக்கு சிட்டா, பட்டா, கிடைக்காததால் விவசாயிகளுக்கான கிசான் அட்டை பெறுவதில் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, விவசாயிகளின் நிலையை உணர்ந்து கிசான் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வாங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X