விழுப்புரம்:ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.அரசூரில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் டேவிட் குணசீலன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் சர்வேஸ்வரன் வரவேற்றார்.மாநில கவுரவ தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், மாநில துணைத் தலைவர் செல்லத்துரை, தலைமை நிலைய செயலர் ஏகாம்பரம், எத்திராஜ் சிறப்புரையாற்றினர்.தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சிங்காரம், தமிழ்நாடு அரசு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாநில அமைப்பு செயலர் சிவகுரு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில துணை பொதுச்செயலர் அருணகிரி, அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வாழ்த்திப் பேசினர்.கூட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதை மத்திய மாநில அரசுகள் தவிர்க்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.