கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் அடுத்த விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தேசிய மால்கம் போட்டிக்கான தமிழக அணி வீரீர்கள் தேர்வு நடந்தது.தேர்விற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மால்கம் கழகத் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் துரை செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் சிவக்குமார் வரவேற்றார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தொழில்நுட்ப குழு இயக்குனர் ராமச்சந்திரன் மற்றும் தேசிய மாநில நடுவர்கள் வீரர்களை தேர்வு செய்தனர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் விக்ரம், மோகன், ரவிகிரண் உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.