திண்டிவனம்:தென்னிந்திய திருச்சபை, வேலுார் பேராயத்தின் கட்டுப்பாட்டில், திண்டிவனத்தில் உள்ள சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் ஆலயத்தின், 150வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், 150ம் ஆண்டு நினைவுத் துாணை, பேராயர் ஷர்மா நித்தியானந்தம் திறந்து வைத்து, காட்டுச்சிவிரி ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அமைச்சர் சண்முகம், 150வது ஆண்டு சிறப்பு தபால் தலையினை வெளியிட்டு பேசினார். பேராயத்தின் துணைத் தலைவர் ஐசக் கதிர்வேலு, செயலர் சம்பத் சதானந்தம், பொருளாளர் சுந்தர்ராஜ், தென் வட்டார தலைவர் புஷ்பநாதன் ஆகியோர் பேசினர்.நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜெபராஜ், தேவபிரசாத், ஜோசப் பிரேம்குமார், தனகோட்டி மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.