முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
00:48

விழுப்புரம்:வளவனுாரில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.கடைவீதியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலர் முருகவேல் தலைமை தாங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முன்னாள் நகர செயலர்கள் காசிநாதன், வாசுதேவன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெகதீசன், முன்னாள் கவுன்சிலர்கள் பாஸ்கரன், முகமதுரபி, துரை, பாபு மற்றும் ஜெயா, சவுந்தர், மணி, சீனு, சுகன்ரவி, ராம்ராஜ், பாலமுருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் நகர அ.தி.மு.க., சார்பில், நடந்த விழாவிற்கு, நகர செயலர் வழக்கறிஞர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணைச் செயலர் அற்புதவேல், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கலைச்செல்வம், மகளிரணி மாவட்ட துணைச் செயலர் தமிழ்ச்செல்வி அற்புதவேல், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.செஞ்சி: வல்லம் வடக்கு ஒன்றியம் சார்பில் அவியூர் கிராமத்தில் ஒன்றிய செயலர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கி ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவி வழங்கினார்.முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் பரிமளா பன்னீர்செல்வம், அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலர் ரமேஷ், முன்னாள் தலைவர்கள் கல்ராயன், பூபதி, நிர்வாகிகள் பொன்னுசாமி, சிவகுமார், ராஜாமணி, அருள், ராஜ்குமார், ஜான் செல்வராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் வல்லம், நாட்டார்மங்கலம் கூட்ரோடு, களையூர், வடவானுார் அகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலர் அண்ணாதுரை, ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கினார்.பேரவை ஒன்றிய செயலர் வெங்கடேசன், பொருளாளர் மனோகரன், ஸ்ரீதர், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாலமுருகன், நடராஜன், கீதா செல்வம், கவிதா தனசேகர், ரவிச்சந்திரன், மாஜி கவுன்சிலர் வெங்கடாசலம், ரவி, சுமதி கிருஷ்ணமூர்த்தி, சுதா பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் விநாயகம், செந்தாமரைக்கண்ணன், ஆறுமுகம், குமார், கிளை நிர்வாகிகள் காந்தி, நடராஜன், வேலாயுதம் பங்கேற்றனர்.திருக்கோவிலுார்: முகையூர் ஒன்றியம் சென்னகுணம், நாதன்காடுவெட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கிளை செயலர் ராஜேந்திரன் தலைமையில், ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.கிளை செயலர்கள் சங்கர், மேலவை பிரதிநிதிகள் பாண்டுரங்கன், முருகவேல், முன்னாள் செயலர்கள் சேகர், கேசவன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டிவனம்:திண்டிவனத்தில், அ.தி.மு.க., நகர செயலர் தீனதயாளன் தலைமையில் ஜெ., படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், மாவட்ட பாசறை செயலர் ஜெயப்பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், வழக்கறிஞர் ராமச்சந்திரன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், விஜயகுமார், ராஜேந்திரன், பாலச்சந்திரன், அய்யப்பன், ஜாகீர்உசேன், ஜனார்த்தனன், வேணுகோபால், எம்.ஜி.ஆர்., இளைஞரணி உதயகுமார், தளபதி ரவி, மணிமாறன், ஜெ., பேரவை காளிதாஸ், மகளிர் அணி மீனா, குப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சலவாதி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஒன்றிய செயலர் ஜெயகிருஷ்ணன், பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கிளைச் செயலர் வி.ஏழுமலை, நிர்வாகிகள் கலைவாணன், எஸ்.ஏழுமலை, முருகன், கமல்பாய், மனோகர், மேலவை பிரதிநிதி சக்திவேல், பெரியசாமி, சேகர், முனுசாமி, பஞ்சநாதன், மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.சட்டத்துறை அமைச்சர் சண்முகம், பொது மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, அன்னதானம் வழங்கினார். நகர செயலர் தீனதயாளன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் முகமது ெஷரீப், முன்னாள் நகர்மன்ற தலைவர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகர அவைத்தலைவர் மணிமாறன், தளபதி ரவி, மகளிர் அணி மீனா, குப்பு, திருமகள், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சேட்டு, ஜாகீர்உசேன், சக்திவேல், செந்தில்குமார், விஜயகுமார் நிர்வாகிகள் சுரேஷ், உதயகுமார், அண்ணாதுரை, ஸ்ரீதர்சங்கர், ஆனந்தன், கோகுல், அரிகிருஷ்ணன், பூதேரிஆனந்த் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X